செய்திகள்

கிரீஸ் நாட்டில் 2 ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்: 32 பேர் பலி

ஏதென்சு, மார்ச் 1–

கிரீஸ் நாட்டில் டெம்பி நகர் அருகே ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட நிலையில், 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிரீஸ் நாட்டில் டெம்பி நகர் அருகேயுள்ள எவங்கெலிஸ்மோஸ் பகுதியில், 350 பயணிகளுடன் சென்ற பயணிகள் ரெயிலும், சரக்கு ரெயிலும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 85 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில், 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

2 பெட்டிகள் எரிந்து நாசம்

இதுகுறித்து, கவர்னர் கான்ஸ்டான்டினோஸ் அகோராஸ்டோஸ் கூறுகையில், அதி வேகத்தில் வந்த ரெயில்களின் மோதல், மிகவும் வலுவாக இருந்தது. இதனால் பயணிகள் ரெயிலின் முதல் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. மோதலுக்குப் பிறகு தீப்பிடித்த முதல் இரண்டு பெட்டிகள், கிட்டத்தட்ட முற்றிலும் அழிந்துவிட்டன என தெரிவித்துள்ளார்.

ரெயில்கள் நேருக்கு நேர் மோதி 32 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *