செய்திகள் நாடும் நடப்பும்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியா உலக கோப்பை போட்டிகள்: சபாஷ் பி.சி.சி.ஐ.


ஆர்.முத்துக்குமார்


இறுதிப் போட்டியில் இம்முறை ஒரு நாள் உலகக் கோப்பை நம் கையில் இருந்து இறுதி கட்டத்தில் நழுவி இருக்கலாம். ஆனால் மிக சிறப்பான ஏற்பாடுகளாலும் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்து இழுத்த வகையில் நாம் வெற்றிக் கோப்பையை ஈன்றதற்கு சமமானதே!

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரை 1.25 மில்லியன் மக்கள் மைதானத்துக்கு வந்து பார்வையிட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமான பார்வையாளர்களை மைதானத்துக்கு வரவழைத்து தொடராக சாதனை படைத்துள்ளது உலகக் கோப்பையின் 13-வது பதிப்பு.

இந்த கிரிக்கெட் திருவிழாவின் ஆட்டங்கள் நாட்டில் உள்ள 10 நகரங்களில் நடத்தப்பட்டது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்று 6–வது முறை சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அதிக அளவிலான பார்வையாளர்களை மைனதானங்களுக்கு வரவழைத்து உள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரை 12,50,307 (1.25 மில்லியன்) பேர் மைதானத்துக்கு வந்து கண்டுகளித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் முடிவந்தடைந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 2015 மற்றும் 2019 ஆண்டுகளில் நடத்தப்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரைக் காட்டியலும் அதிகமான பார்வையாளர்களை மைனதானங்களுக்கு வரவழைத்து உள்ளது.

கடந்த 2015–ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரை 10,16,420 பேரும் 2019–ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடத்தப்பட்ட தொடரை 7,52,000 பேரும் மைதானத்துக்கு நேரில் வந்து பார்த்துள்ளனர்.

இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 48 போட்டிகளில் நடைபெற்ற நிலையில் ஒட்டுமொத்த போட்டிகளுக்குமான சராசரி பார்வையாளர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 26 ஆயிரம் ஆக இருந்துள்ளது.

இறுதிப் போட்டியின் போது ஒரு குறிப்பிட்ட டிவி சேனலில் மட்டும் 3 கோடிக்கும் மேல் பார்வையாளர்கள் பார்த்து ரசித்து இருக்கிறார்கள்.

இந்த கிரிக்கெட் திருவிழா நமது கிரிக்கெட் வாரியத்திற்கு பல லட்சம் கோடியை ஈட்டி இருப்பதும் சாதனையாகும்.

கிரிக்கெட் ஒளிபரப்பு ஈட்டும் வருவாய் பெருவாரியாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு செல்கிறது. மேலும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கும் மிகப்பெரிய வருவாய் பெற்று தருவதும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

உலக விளையாட்டு ரசிகர்களுக்கு போட்டியை டிவி சேனலில் பார்ப்பது மட்டுமின்றி பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபடவும் முடியும்! அதன் வருவாயும் பல ஆயிரம் கோடி டாலர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

உலக அரங்கில் கால் பந்தாட்டம், டென்னிஸ் போட்டிகள் மிக அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டுக்கள் ஆகும். அந்த வரிசையில் கிரிக்கெட்டும் மிக அதிக வருவாய் ஈட்டும் வல்லமை பெற்றிருக்கிறது.

நம் நாட்டில் பல ஆண்டுகளாகவே பள்ளி வயது முதலே பல பிரபல விளையாட்டு வீரர்கள் உருவாகி வளர ஏதுவான களம் அமைந்துள்ளது.

இதில் நகரப் பகுதி சிறுவர்களுக்கு கிடைத்து வரும் வாய்ப்புகள் கிராமப்புற இளைஞர்களுக்கு கிடைக்காத நிலை இருந்தது. ஆனால் ஐபிஎல் ஆட்டம் மாநில அளவிலும் பரபரப்பாக நடத்தப்படுவதால் பலருக்கு வாய்ப்புகள் கிடைத்து மாநில அணிகளில் விளையாடவும் தேசிய அளவில் பிரகாசிக்கவும் முடிகிறது.

கிரிக்கெட் வாரியம் சமீபமாகத் தான் பெண்கள் அணிகளுக்கும் போதிய வருவாய் தரும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.

அதே நேரத்தில் உடல் ஊனமுற்றோர் விளையாட்டு வீரர்களுக்கும் நல்ல வருமானத்தை பெற ஆவன செய்தாக வேண்டும்.

விளையாட்டு துறையில் கிரிக்கெட் வீரர்களின் சாதனை அபாரமானது. இம்முறை இறுதி போட்டியை தவிர அனைத்து போட்டிகளிலும் விளையாடிய விதம் உலக ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.

இதே வேகம் செஸ், பேட்மிண்டன், ஹாக்கி, கால் பந்தாட்டங்களிலும் தொட வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *