செய்திகள்

கிராம நிர்வாக அதிகாரியின் முகத்தில் ஆசிட் வீச்சு: போலீஸ் ஏட்டுவிடம் விசாரணை

Spread the love

சென்னை, டிச. 2–

கிராம நிர்வாக அதிகாரியின் முகத்தில் ஆசிட் வீசிய கியூ பிரிவு ஏட்டுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், அடி அண்ணாமலை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 31). திருவண்ணாமலை, கிளிபட்டு, கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அதே அலுவலகத்தில் வருவாய் கோட்ட ஆய்வாளராக பணிபுரிபவர் உண்ணாமலை நகர் வேங்கிக்காலைச் சேர்ந்தவர் ஞானசுந்தரி. இவரது கணவர் ஸ்ரீபால், திருப்பத்தூர் கியூ போலீஸ் பிரிவில் ஏட்டாக உள்ளார்.

இந்நிலையில் ஞானசுந்தரி, சிவக்குமாருடன் நெருங்கிப் பழகியதால் ஸ்ரீபால், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார். அது தொடர்பாக ஸ்ரீபால், சிவக்குமார் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஸ்ரீபால் தனது கையில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து சிவக்குமார் மீது ஊற்றினார். இதில் சிவக்குமாரின் முகம், மார்பு பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. அங்குள்ளவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு 36 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளர்.

மேலும் ஆசிட் வீசிய ஸ்ரீபாலின் தலை மற்றும் முகம் பகுதியில் காயம் ஏற்பட்டதால் அவரும் இன்று காலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவக்குமார் மற்றும் ஸ்ரீபால் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *