மும்பை, ஏப். 10–
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பயன்பாடற்று பாழடைந்த நிலையில் இருந்த கிணற்றில் விழுந்த பூனையை மீட்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.
நாசிக் மாவட்டம் வக்கடி கிராமத்தில் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில், ஒரே ஒருவர் மட்டும் கிராமத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை, பூனை ஒன்று கிணற்றில் விழுந்ததைப் பார்த்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பூனையை மீட்க முயன்றுள்ளனர்.
பூனையை மீட்க முதலில் ஒருவர் கிணற்றில் இறங்கியதும், அவர் விஷ வாயுத் தாக்கி மயங்கி உள்ளார். இந்நிலையில் அவரைக் காப்பாற்ற மற்றொருவர் இறங்க இப்படியே 5 பேரும் இறங்கி பலியாகி உள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், கிணற்றில் விழுந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மின்சாரம் இல்லாததால் இப்பகுதியில் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. கிணறு முழுக்க சேறு சகதியுமாக இருந்ததால், சேற்றுக்குள் சிக்கிய உடல்களை மீட்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது. பின்னர் அனைவரது உடல்களும் நள்ளிரவு மீட்கப்பட்டன.