செய்திகள் வாழ்வியல்

கிட்னியில் இருக்கற மொத்த கழிவையும் வெளியேற்றிவிடும் மாதுளை, நெல்லிக்காய் ,ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, நாவல் பழம்

Makkal Kural Official

நல்வாழ்வுச் சிந்தனைகள்


சிறுநீரகம் நம உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று. உடலில் உள்ள அதிகப்படியான சோடியம், யூரியா மற்றும் உடலில் உள்ள கழிவுகள் ஆகியவற்றைப் பிரித்தெடுத்து சிறுநீராக வெளியேற்றும் வேலையைச் செய்கிறது. அதனாலேயே சிறுநீரகத்திலும் கழிவுகள் அதிகமாக தேங்கி செயல்திறன் குறைந்து போகும். அதைச் சரிசெய்ய அவ்வப்போது சிறுநீரகத்தை இயற்கையான முறையில் டீடாக்ஸ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மருந்து முறைகளை விட ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் வழியாக செய்வது சிறந்தது.1​. பெர்ரி வகை பழங்கள்

பெர்ரி வகை பழங்கள் நாவல் பழம், நெல்லிக்காய் உள்ளிட்டவை என்றாலே ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் கொட்டிக் கிடப்பவை என்று அர்த்தம்.

ஸ்டிராபெர்ரி, ப்ளூபெர்ரி, பிளாக்பெர்ரி, ராஸ்பெர்ரி, நாவல் பழம், நெல்லிக்காய் உள்ளிட்டவைற்றில் ஏதேனும் ஒரு பழத்தை தினசரி டயட்டில் சேர்த்துக் கொண்டு வரும்போது சிறுநீரகச் செயல்பாடு மேம்படும்.

இவற்றிலுள் பைட்டோ கெமிக்கல்கள் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை சுத்திகரித்து வெளியேற்றும் தன்மையைக் கொண்டிருக்கின்றன.

வாட்டர்மெலன் தான் பழங்களிலேயே அதிக நீர்ச்சத்து உடைய பழமாகும். கிட்டதட்ட 90 சதவீதத்துக்கும் மேல் நீர்ச்சத்து கொண்டது. அதனால் இதற்கு தண்ணீர்ப்பழம் என்றும் ஒரு பெயருண்டு.

இதிலுள்ள நீர்ச்சத்து சிறுநீரகத்தில் உள்ள கழிவுகள் வெளியேற்றும். சிறுநீரகத்தில் ஏற்படும் வீக்கங்கள், நீர்க்கோர்த்தல் ஆகியவற்றைக் குறைக்கிறது.​

ஆரஞ்சு, எலுமிச்சை, கிரேப் ப்ரூட் உள்ளிட்ட சிட்ரஸ் பழங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவது போலவே சிறுநீரகத்தையும் பலப்படுத்தி அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

குறிப்பாக உடல் முழுவதும் திரவங்களின் தன்மையை சமநிலையில் வைத்திருப்பதோடு சிறுநீரகத்தை டீடாக்ஸ் செய்து, சிறுநீரகக் கற்கள் உருவாகாமலும் தடுக்கிறது.

சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் சூப்பர் பழம் என்றால் அது மாதுளை என்று சொல்லலாம்.

மாதுளைக்கு சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை நீக்கும் ஆற்றல் உண்டு. தினமும் 200 மில்லி அளவு இனிப்பு சேர்க்காத மாதுளை சாறு குடித்து வர சிறுநீரகம் தூய்மையாக இருக்கும்.

மாதுளையில் உள்ள வைட்டமின் சி – யுடன் பாஸ்பேட், சிட்ரேட், கால்சியம் உள்ளிட்டவை சிறுநீரகத்தில் உள்ள நீர்மத்தை சமநிலையில் வைத்திருக்க உதவும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *