டெல்லி, ஜூலை 5–
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்த விசாரணை, உச்சநீதிமன்றத்தில் 11 ந்தேதி நடைபெற உள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பிரிவு 370-ன் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீண்ட காலமாக விசாரிக்கப்படாமல் இருந்தன.
இந்நிலையில், இம்மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனுக்களை விசாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.