செய்திகள்

காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயற்சி: 2 பேர் சுட்டுக்கொலை

சிறீநகர், ஆக. 7–

காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள், ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தெக்வார் செக்டார் பகுதியில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதாக தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து எல்லையிலேயே ஒருவர் ராணுவத்தால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

2 பேர் சுட்டுக்கொலை

மேலும் ஒருவர் தப்பியோட முயன்ற போது, இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் சுடப்பட்டார். இதனால் எல்லை தாண்ட முயன்ற 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

ஊடுருவலை தடுக்க முயன்ற போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முற்பட்டதாகவும் அதனால் நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *