செய்திகள்

காஷ்மீர் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தளபதி சுட்டுக்கொலை

Makkal Kural Official

ஸ்ரீநகர், ஏப். 25–

காஷ்மீரின் பந்திபுரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் லஷ்கர்–இ–தொய்பா முக்கிய தளபதி சுட்டு கொல்லப்பட்டான்.

காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் அடில் மற்றும் ஆசிப்பின் வீடுகளை வெடி வைத்து இந்திய ராணுவம் தகர்த்தது.

பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர்–இ–தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாகிஸ்தான் ராணுவம்

துப்பாக்கிச் சூடு

இந்தச் சூழலில் ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

லஷ்கர்–இ–தொய்பா தளபதி

சுட்டுக்கொலை

இந்நிலையில், காஷ்மீரின் பந்திபுரா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே நடந்த மோதலில் பயங்கரவாதி கொல்லப்பட்டான்.

கொல்லப்பட்ட பயங்கரவாதி லஷ்கர்–இ–தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி அல்தாப் லாலி என்பது தெரியவந்துள்ளது.

பயங்கரவாதியின் வீடு

வெடிவைத்து தகர்ப்பு

இதற்கிடையே, காஷ்மீரில் பயங்கரவாதி வீட்டை இந்திய ராணுவம் தரைமட்டமாக்கியது. காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் அடில் மற்றும் ஆசிப்பின் வீடுகளை வெடி வைத்து இந்திய ராணுவம் தகர்த்தது. இந்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *