செய்திகள்

காஷ்மீரை போர்க்களமாக மாற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி பேட்டி

ஸ்ரீநகர்,மார்ச்.10–

தேர்தல் ஆதாயத்துக்காக ஜம்மு–-காஷ்மீரை போர்க்களமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்று மெகபூபா முப்தி தெரிவித்தார்.

ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி கூறியதாவது:–-

காஷ்மீரில் இரும்புக் கரம் கொண்டு அடக்குவது, காஷ்மீர் மக்களை அச்சுறுத்துவது ஆகியவற்றை மத்திய அரசு செய்து வருகிறது. ஜமாத்- ஏ -இஸ்லாமி ஜம்மு -காஷ்மீர் என்ற அமைப்பை தடை செய்திருப்பது ஜனநாயக விரோதமானதும், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதும் ஆகும். இதன்மூலம், முஸ்லிம்களின் உணர்வுகள் புண்பட்டது.

அந்த அமைப்பு பள்ளிகளை நடத்தி வருகிறது. அந்த அமைப்பு ஒரு சமூக-மத ரீதியான அமைப்பாகும். காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் வெளிமாநிலங்களில் தாக்கப்படுகின்றனர். பா.ஜ.க.வின் கொள்கைகளை யார் எதிர்த்தாலும் அதற்காக பழிவாங்கும் நடவடிக்கையில் பா.ஜ.க. இறங்குகிறது. தேர்தல் ஆதாயத்துக்காக ஜம்மு-காஷ்மீரை போர்க்களமாக மாற்ற பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அமைதிப் பேச்சுவார்த்தை ஒன்றே காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *