செய்திகள்

காஷ்மீரில் தாக்குதல் நடத்த போவதாக மிரட்டல் விடும் பயங்கரவாத குழுக்கள்

Spread the love

முஷாபராபாத்,ஆக.16–

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முஷாபராபாத் நகரில் பயங்கரவாத குழுக்கள் ஒன்றிணைந்து இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன. அத்துடன் காஷ்மீரிலும் இதே போன்றதொரு போராட்டமும், பழிவாங்கும் நடவடிக்கையும் தொடங்க உள்ளதாக அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.காஷ்மீரில் 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளை இந்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதற்கு பிறகு இந்தியாவை குறிவைத்து குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக ஹிஸ்புல் முஜாஹிதீன், சையது சலாஹூதீன் தலைமையிலான ஒருங்கிணைந்த ஜிகாத் கவுன்சில் போன்ற பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் நிர்வாகம் ஊக்குவித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ஹிஸ்புல் முஜாஹிதீன், முன்னாள் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் ஆகியோர் ஒன்றிணைந்து முஷாபராபாத்தில் உள்ள பத்திரிக்கையாளர் சங்க அலுவலகம் முன் கூடி இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி உள்ளனர். இந்தியா மீது தாக்குதல் நடத்த தாங்கள் தயாராக உள்ளதாகவும், மற்ற பயங்கரவாதிகள் முன்னேறிச் செல்லும்படியும் இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டனர்.

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகள் போராட்டம் நடத்துவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் ராஜிவ் இந்தியாவின் பிரதமராக இருந்த போதும், இதே போன்று போராட்டம் நடத்தி, இந்தியா மீது போர் தொடுக்க உள்ளதாக எச்சரித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *