செய்திகள்

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டப் பணிகள்: கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

புதுக்கோட்டை, மே.23–

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட பணிகளை மேற்கொள்வதற்கு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார் புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரி.

கலெக்டர் தெரிவிக்கையில்;–

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்ட பணியினை செயல்படுத்துவதற்கு ஏதுவாக நில கையெடுப்பு பணியினை மேற்கொள்வதற்காக புதிதாக வருவாய் அலுவலர் இரா.ரம்யாதேவி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர்களுக்கு கீழ் 3 அலகுகள் அமைக்கப்பட்டு 3 வட்டாட்சியர்கள் தலைமையில் மாவட்டத்தில் இப்பணிக்கு 656.36 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தும் வகையில் பணிகளை துரிதப்படுத்திட இன்றையதினம் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.

இக்கூட்டத்தில் விராலிமலை, குளத்தூர், புதுக்கோட்டை ஆகிய 3 வட்டங்களில் நில கையெடுப்பு பணியினை மேற்கொள்ளும் வகையில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்), நிலஅளவைத்துறை, வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் ஒருங்கிணைந்து இப்பணியினை மேற்கொள்கின்றனர். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி, தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.காளிதாசன், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) உதவிப்பொறியாளர் உமாசங்கர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *