செய்திகள்

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Makkal Kural Official

மேட்டூர், ஜூலை 9–

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகவும் மேட்டூர் அணைக்கு 3341 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமெடுக்க ஆரம்பித்தது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. கேஆர்எஸ் அணைக்கு இன்று காலை நிலவரப்படி 8,245 கன அடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 103.40 அடியை எட்டியுள்ளது.

அதேபோல காவிரி, மற்றொரு முக்கிய அணையான கபினிக்கு 4711 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 19.52 டிஎம்சி என்ற நிலையில், தற்போது 18.17 டிஎம்சி தண்ணீர் வரத்து உள்ளது. கபினி அணையில் இருந்து 2292 கன அடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து 567 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர்வரத்து அதிகரிப்பு

இதன் காரணமாகவும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகவும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 40.59 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 3341 கன அடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது. நீர் இருப்பும் 12.39 டிஎம்சியாக உயர்ந்துள்ளது. குடிநீர் தேவைக்காக மட்டும் அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கர்நாடகம் உபரி நீரை வெளியேற்றி வரும் இந்த சூழலில், தமிழ்நாட்டுக்கு நல்ல தண்ணீர் வரத்து உள்ளது. இந்நிலையில் காவிரி ஆணையம் உடனே கூடி இன்னும் அதிகப்படியான தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறக்க உத்தரவிட வேண்டும் என்பது டெல்டா விவசாயிகளின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *