செய்திகள்

காவல் துறைக்கும் – பொதுமக்களுக்கும் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்த நடவடிக்கை

காவல் துறைக்கும் – பொதுமக்களுக்கும் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்த நடவடிக்கை

தூத்துக்குடி புதிய எஸ்.பி. ஜெயக்குமார் உறுதி

 

தூத்துக்குடி, ஜூலை 1–

காவல் துறைக்கும் –- பொதுமக்களுக்கும் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி. ஜெயகுமார் தெரிவித்தார்.

சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி. ஜெயக்குமார் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு எஸ்.பி. அருண் பாலகோபாலன் பூங்கொத்து கொடுத்து வரவேற்று பொறுப்புகளை ஒப்படைத்தார்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணி பாதுகாக்கவும், சாலை விபத்துக்களை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலை சீர் செய்யவும், குற்றங்களை தடுக்கவும், நடந்த குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *