செய்திகள்

காவல்துறை அவசர எண் 100, 112 சேவைகள் மீண்டும் தொடக்கம்

Spread the love

பிஎஸ்என்எல் தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டன

காவல்துறை அவசர எண் 100, 112 சேவைகள் மீண்டும் தொடக்கம்

 

சென்னை, மே. 23–

பிஎஸ்என்எல் தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதன் காரணமாக காவல்துறையின் அவசர எண் 100, 112 சேவைகள் மீண்டும் செயல்பட தொடங்கியது.

தமிழக காவல்துறையில் பழுதடைந்த அவரச அழைப்பு எண்கள் இன்று காலையில் சரிசெய்யப்பட்டதால் அந்த எண்களில் பொதுமக்கள் வழக்கம் போல அழைக்கலாம் என டிஜிபி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் தொலை தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர்டெல், வோடாபோன், ஐடியா, ஜியோ வாடிக்கையாளர்களின் செல்போனில் இருந்து அவசர தொலைபேசி எண்ணான 100, 112 என்ற எண்ணுக்குரிய அழைப்புக்களை காவல் கட்டுப்பாட்டு அறையில் பெறுவதில் இடர்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் 22.05.2020 முதல் போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044- 46100100, 044- 71200100 ஆகிய புதிய எண்களை தொடர்பு கொள்ள காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டன.

இந்நிலையில் தொழில் நுட்ப கோளாறுகள் ச சரிசெய்யப்பட்டதால் பொதுமக்கள் வழக்கம் போல மீண்டும்

100, 112 ஆகிய எண்களில் அழைக்கலாம் என்று தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *