சிறுகதை

காவலன்! – வெ.இராம்குமார்

இயற்கை மனநலக் காப்பகம்..

தனது அறையை விட்டு வெளியே வராந்தாவுக்கு வந்த டாக்டர் சேவியர் அங்கிருந்தவனைப் பார்த்து அதிர்ந்துபோய் நின்றார்.

“வணக்கம் டாக்டர்.

“வணக்கம். பிரிட்டோ,எப்படியிருக்கே?”

“நல்லாயில்லை டாக்டர்.”

“என்னாச்சு, நீ மட்டும் தனியாவா வந்தே?

“ஆமாம் டாக்டர்.”

“பல வருஷமா இந்த காப்பகத்துல ட்ரீட்மென்ட் எடுத்து வந்த உன்னை இரண்டு மாசத்துக்கு முன்னாடிதானே முழுமையா குணப்படுத்தி உன்னைப் பெத்தவங்களோடு அனுப்பி வெச்சேன். அவங்களோடு நீயும் சந்தோஷமாயிருக்காம இங்கே ஏம்ப்பா வந்தே?

உடனே கதறி அழ ஆரம்பித்தவனை புரியாமல் பார்த்தார் டாக்டர்.

“டாக்டர்! என்னை பெத்தவங்களும், இந்த சமுகமூம் என்னை இன்னும் முழுமையான மனுஷனாகவே நம்பவுமில்லை; ஏத்துக்கவுமில்லை. வார்த்தைக்கு வார்த்தை பைத்தியக்காரன்னுதான் கூப்பிடறாங்க. மனநலக் காப்பகத்துலயிருந்து வந்தேன்னு சொன்னால் வேலை தரமறுக்கறாங்க. நான் மறுபடியும் பழைய மாதிரியாயிடுவேனோன்னு பயமாயிருக்கு டாக்டர். எனக்கு இதே காப்பகத்துல ஏதாவது வேலை கொடுங்க. கடைசிவரை இங்கேயே செட்டிலாயிடறேன். அல்லது உங்க கையாலேயே என்னை கொன்னுடுங்க.”

“இதுபோல பிரச்சனைகள் ஆரம்பத்துல அதிகமா உன்போன்றவங்களுக்கு வரும் பிரிட்டோ. அதையும் மீறிதான் நாம வெளியே வரணும். இதுபோல காப்பகங்கள்ல, டாக்டர்களை போல, குணமான நோயாளியும் புதிய நோயாளிகளான பெற்றோர், குடும்பத்தினருக்கு கவுன்சிலிங் செஞ்சா எப்படியிருக்கும்ன்னு. அப்பத்தான் நோயாளிகளுக்கும் அவங்களை சார்ந்தவங்களுக்கும் எதிர்மறை எண்ணங்கள் குறைந்து, நம்பிக்கை வரும். அதற்கு நீதான் சரியான ஆள். இன்றுமுதல் நீதான் என் அசிஸ்டெண்ட்.”

“ஹைய்யா இனி நானும் டாக்டர்…. நானும் டாக்டர்…..”என இன்ப அதிர்ச்சியில் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டிருந்தவனை அதிர்ச்சியுடன் பார்த்தார் சேவியர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *