வாழ்வியல்

கால் விரல்களில் உண்டாகும் நோயைத் தடுக்கும் அத்திப்பழம்

அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும்.

அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது அம்மரத்தின் பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது.

அத்திமரங்கள் 6 – 8 மீட்டர் உயரம் வரை வளரக் கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி , நாட்டு அத்தி .

அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்தலாம். கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *