செய்திகள்

கால் விரல்களால் தேர்வு எழுதி 12-ம் வகுப்பில் 70% மதிப்பெண் பெற்ற உத்தரபிரதேச மாணவன்

லக்னோ, ஆக. 2–

உத்திரபிரதேசம் மாநிலம், லக்னோவில், துஷார் என்ற மாணவன், கால் விரல்களால் தேர்வு எழுதி 12-ம் வகுப்பு தேர்வில் 70% மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

உத்திரபிரதேசம் மாநிலம், லக்னோவில், துஷார் என்ற மாணவனுக்கு, பிறந்ததிலிருந்தே இரண்டு கைகளும் செயல்படவில்லை. இந்நிலையில், துஷார், 12-ம் வகுப்பில், தனது கால் விரல்களால், தேர்வெழுதி 70% மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

இதுகுறித்து, துஷார் கூறுகையில், பிறந்ததிலிருந்து என் இரண்டு கைகளும் செயல்படவில்லை. ஆனால் நான் அதை ஒரு குறைபாடாக ஒருபோதும் கருதவில்லை. நான் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று என் பெற்றோரிடம் கேட்டேன். ஆனால் நான் எப்படி எழுதுவது என்பது தடையாக இருந்தது. என் உடன்பிறப்புகள் படிக்கும்போது, நான் என் கால்விரல்களை என் கைகளாக மாற்றி எழுத ஆரம்பித்தேன் என தெரிவித்துள்ளார்.

கால்களால் திருப்பி படிப்பேன்

மேலும் அவர் கூறுகையில், நான் எனது கால்விரல்களால் தேர்வுகளை எழுதும் போது, விடைத்தாள்களை அழகாக காண்பிக்க, கருப்பு மற்றும் நீல பேனாக்களை பயன்படுத்தி எழுதினேன். கால் விரல்களால் என் புத்தகங்களில் பக்கங்களையும் என்னால் திருப்ப முடியும் என்று கூறி உள்ளார்.

மேலும் தன்னை ஆதரித்த ஆசிரியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ள மாணவர், ஆசிரியர்கள் என்னை தரையில் அமர்ந்து தேர்வுகளை எழுத அனுமதித்தனர். எனது மதிப்பெண்களை குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் பத்தாம் வகுப்பில் 67 சதவீத மதிப்பெண்களைப் பெற்றேன். தற்போது நான் பனிரெண்டாம் வகுப்பு 70 சதவீத மதிப்பெண்களைப் பெற்று உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *