சிறுகதை

கால் ரெக்கார்டர்- ராஜா செல்லமுத்து

செல்போனில் பேசும் அத்தனை பேர் பேச்சுக்களையும் கால் ரெக்கார்டர் செய்தாள் குமாரி.

யார் பேசினாலும் அதை அப்படியே பதிவு செய்து மற்றவர்களிடம் போட்டு காட்டுவது தான் அவள் வேலை. ஒரு நாள் அவளின் உறவினர் சுபாவைக் கூப்பிட்டு

‘‘நீங்க அனிதா பற்றி எப்படி நினைக்கிறீங்க? ’’என்று கேட்டாள் குமாரி.

ஏன் அப்படி கேட்கிற என்று சுபா மறு கேள்வி கேட்டாள்.

இல்ல அவங்களை பற்றி என்ன மதிப்பீடு வச்சிருக்கீங்க என்று மறுபடியும் கேட்டாள் குமாரி.

அவங்க ரொம்ப நல்லவங்க என்று மறு பதில் சொன்னாள் சுபா

அப்படியா என்று சொல்லிவிட்டு அவளின் செல்போனிலிருந்து கால் ரெக்கார்டரை ஆன் செய்தாள்.

அப்போது குமாரியும் அனிதாவும் பேசியது வெளியே வந்தது.

‘‘அனிதா அக்கா எப்படி இருக்கீங்க? ’’ என்று குமாரி கேட்க

நான் நல்லா இருக்கேன் என்று அனிதா சொன்னாள்.

குடும்ப விஷயங்கள் பிரச்சனைகள் அத்தனையும் பேசியே குமாரி

சுபாவை பற்றிக் கேட்டாள்.

அவ நல்லவ தான் என்ன கொஞ்சம் கோபக்காரி, யாரையும் பட்டுன்னு பேசுவா, அதுதான் அவகிட்ட பிடிக்காத விஷயம் என்று அனிதா சொன்னாள்.

வேற சுபா பற்றி இல்லையா என்று குமாரி கேட்க

வேற என்ன சொல்றது ? என்று அனிதா திருப்பிக் கேட்டாள்.

வேற ஏதாவது சொல்லுங்க என்று மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டே இருந்தாள் குமாரி.

சுபா அவங்க வீட்டு ஆளுகளுக்கு ரொம்ப நல்லா செய்றா சம்பாதிக்கறதெல்லாம் அவங்க வீட்டுக்குத் தான் கொடுக்கிறா குடும்பத்தை சரியாக கவனிக்கவில்லை. . இதெல்லாம் தப்புன்னு அவளுக்கு தெரியவில்லை. கண்டிப்பா அவளுக்கு தெரியும். இதச் சொன்னா சண்டை வந்துடும் என்று எதையோ சொல்லிக் கொண்டிருந்தாள் அனிதா.

இதையெல்லாம் தன்னுடைய செல்போன் ரெக்கார்டரில் இருந்து போட்டுக் காட்டினாள் குமாரி.

இதைக் கேட்ட சுபாவுக்கு கோபம் வந்தது.

என்ன…. அனிதா கூட நல்லதாகத்தான் பேசுறேன். ஏன் என்னை பற்றி இப்பிடி பேசுறாங்க என்று சுபா கோபப்பட்டாள்

பாத்துக்க இதுதான் உலகம். நீ நினைக்கிற மாதிரி அவங்க இல்ல. உன்ன அவங்க தவறாகத்தான் நினைக்கிறார்க என்று சுபாவிடம் அனிதாவை கோள் மூட்டினாள்

அப்படியே மறுநாள் அனிதாவிடம் சுபாவைப் பற்றிக் கேட்டாள் குமாரி.

சுபா, அனிதாவைப் பற்றி நல்லபடியாகவே சொன்னாள்.

அவள் விடவில்லை.

அனிதா ரொம்ப நல்லவங்க. என்ன வீட்ல புருஷனை மதிக்கிறது இல்ல. அவங்க தான் பெரிய ஆளுன்னு நினைச்சுக்கிட்டாங்க. அவங்ககிட்ட எல்லாம் சொல்ல முடியாது . அவங்க வீட்டுக்காரர் சம்பாதிக்கிறது அனிதா வீட்டுக்கு அதிகமாக கொடுக்கிறார்கள் என்று சுபா பேசியதை குமாரி தன்னுடைய செல்போனில் ரெக்கார்ட் செய்து அதை அனிதாவிடம் போட்டி காட்டினாள்.

இருவருக்குள்ளும் ஒரு பெரிய பகையை உண்டு பண்ணினாள் குமாரி.

இருவரிடமும் அவர்கள் பேசியதை மாறிமாறி போட்டுக்காட்டி குழப்பத்தை ஏற்படுத்தினாள். அது இருவருக்கும் தெரியாது.

தான் மட்டும் நல்லவள் போல் நடித்து கொண்டு இருந்தாள் குமாரி.

ஒருநாள் குமாரி பேசியதை வேறொரு நபர் தன் செல்போனில் ரெக்கார்ட் செய்தார்.

அவள் பேசியதை யாரிடமும் காட்டவில்லை, காட்டினால் குமாரி எப்படிப்பட்டவர் என்பது அவர்களுக்குத் தெரியும்.

ஆனால், அவள் நல்லவள் போலஅங்கும் இங்கும் பிரச்சினைகளை கிளப்பி விட்டுக் கொண்டே இருந்தாள்.

இன்றும் தன் போனில் ரெக்கார்ட் செய்து கொண்டுதான் இருக்கிறாள்.

அது எப்போது பூகம்பம் வெடிக்கும் என்பது அவளுக்கும் தெரியாது மற்றவர்களுக்கும் தெரியாது.

ராஜா செல்லமுத்துவின் பிற கதைகள்:

தற்பெருமை

வேவு 

என்ன பார்வை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *