வாழ்வியல்

கால்நடை பராமரிப்பு துறையில் பராமரிக்கப்படும் துறை பண்ணைகள், கால்நடை இனங்கள்

Spread the love

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை ‘‘மாதிரி கால்நடை பண்ணைகளை’’ 12 இடங்களிலும் தீவன விதை உற்பத்தி பண்ணையை ஒரு இடத்திலும் நடத்தி வருகின்றது. இவை மக்களுக்கு பயிற்சியும், ஆலோசனையும் தரும் மாதிரி அலகுகளாக உள்ளன.

பண்ணைகள் மற்றும் இனங்கள்

1) அயலின கால்நடை பண்ணை, ஈச்சங்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம்: பசுவினம் ஜெர்சி, ஜெர்சி கலப்பினம், உம்பளாச்சேரி

எருமையினம் முர்ரா, பசுவினம்: ஜெர்சி கலப்பினம், பிரிசியன் கலப்பினம், சிந்தி, காங்கேயம், பர்கூர், புலிக்குளம். செம்மறியாடுகள்: மேச்சேரி

2) மாவட்ட கால்நடை பண்ணை, ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம்

செம்மறியாடுகள்: மேச்சேரி

வெள்ளாடுகள்: தலைச்சேரி, கொடியாடு சேலம் கருப்பு

பன்றிகள்: பெரிய வெள்ளை யார்க்ஷையர்

கோழிகள்: அசில், கிரிராஜா

குதிரைகள்: கத்தியவார் மற்றும் தரோப்ரெட் இனம்

பசுவினம்: ஜெர்சி கலப்பினம், சாஹிவால்

3) மாவட்ட கால்நடை பண்ணை, அபிசேகப்பட்டி திருநெல்வேலி மாவட்டம்

செம்மறி ஆடுகள்: கீழக்கரிசல்,

வெள்ளாடுகள்: கன்னி ஆடு,

பன்றிகள்: பெரிய வெள்ளை, யார்க்ஷையர் லேண்ட்ரேஸ்

கோழிகள்: வனராஜா, கிரிராஜா, அசில்

4) மாவட்ட கால்நடை பண்ணை, உதகமண்டலம் நீலகிரி மாவட்டம்:

பசுவினம்: ஜெர்சி, ஜெர்சி கலப்பினம், பிரிசியன், பிரிசியன் கலப்பினம்

5) மாவட்ட கால்நடை பண்ணை, புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம்

பசுவினம்: ஜெர்சி கலப்பினம்,

செம்மறி ஆடுகள்: ராமநாதபுரம் வெள்ளை

வெள்ளாடுகள்: ஜமுனாபாரி

பன்றிகள்: லேண்ட் ரேஸ், பெரிய வெள்ளை யார்க்ஷையர்

6) மாவட்ட கால்நடை பண்ணை, நடுவூர் தஞ்சாவூர் மாவட்டம்

பசுவினம்: ஜெர்சி கலப்பினம், பிரிசியன் கலப்பினம்,

தர்பார்க்கர், சாஹிவால்

எருமையினம்: முர்ரா

7) மாவட்ட கால்நடை பண்ணை, செட்டிநாடு சிவகங்கை மாவட்டம்

செம்மறி ஆடுகள் : ராமநாதபுரம் வெள்ளை,

வெள்ளாடுகள்: ஜமுனாபாரி, தலைச்சேரி

பன்றிகள்: பெரிய வெள்ளை யார்க்ஷையர்

கோழிகள்: அசில்

8) கால்நடை பண்ணை, கொருக்கை திருவாரூர் மாவட்டம்

பசுவினம்: உம்பளாச்சேரி

9) ஆட்டுப்பண்ணை, சின்ன சேலம் விழுப்புரம் மாவட்டம்

செம்மறி ஆடுகள்: மேச்சேரி, சென்னை சிவப்பு

வெள்ளாடுகள்: சேலம் கருப்பு, தலைச்சேரி

10) ஆட்டுப்பண்ணை, முகுந்தராயபுரம் வேலூர் மாவட்டம்

செம்மறி ஆடுகள்: சென்னை சிவப்பு

11) ஆட்டுப்பண்ணை, சாத்தூர் விருதுநகர் மாவட்டம்

செம்மறி ஆடுகள்: வெம்பூர்

வெள்ளாடுகள்: கன்னி ஆடு

12) கோழி பண்ணை, காட்டுப்பாக்கம் காஞ்சிபுரம் மாவட்டம்

கோழிகள்: வனராஜா, கிரிராஜா அசில், கிராம ஸ்ரீ, நிக்கோபாரி, பி வி 300, எச்எச் 260

ஜப்பானிய காடை

வான்கோழிகள்: பிரட்பிரெஸ்டெடு பிரான்ஸ், பெல்ட்ஸ்வில்லி வெள்ளை

13) தீவன விதை உற்பத்தி பண்ணை, படப்பை காஞ்சிபுரம் மாவட்டம்

கோஎப்எஸ் 29, வேலி மசால் அகத்தி,

இப் பண்ணைகளில் 2016–-17ம் நிதியாண்டில் 487 கன்றுகள், 1038 செம்மறி ஆட்டுக் குட்டிகள், 947 வெள்ளாடுகள், 2033 பன்றிக் குட்டிகள் பிறந்துள்ளன. அவற்றில் 90% மக்களுக்கு இனவிருத்திக்காக விற்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் கல்லூரிகள், ஆராய்ச்சி மையங்கள், பயிற்சி மையங்களில், கே.வி. கே. எனப்படும் க்ரிஷி விஞ்ஞான் கேந்திராக்களில்ல் பண்ணைகள் உள்ளன. அங்கு இலவச அனுமதி, பயிற்சி, விற்பனை செய்யப்படுகின்ற.

முழு விவரம் பெற

www.tn.gov.in/animal husbandary

www.tnau.ac.in, www.tanwas.gov.in, www.kvkintamilnadu.com, www.icar.nic.in

போன்ற வகைகளைப் பாருங்கள். பண்ணைகளுக்கு சென்று விவரம் அறிந்து தொழில் தொடங்குங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *