செய்திகள்

கால்நடைகளுக்கு சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம்: புளூ கிராஸ் நிறுவனத்துக்கு இந்தியன் ஆயில் நன்கொடை

சென்னை மே 29

விபத்து, நோயுற்றதால் பாதிக்கப்படும் கால்நடைகளை பத்திரமாக கொண்டு வந்து சிகிச்சை அளிக்க இதற்கென்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை இந்தியன் ஆயில், புளூ கிராஸ் நிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கியது. இந்தியன் ஆயில் நிறுவன எக்ஸிகியூடிவ் டைரக்டரும், மாநில தலைவருமான ஆர். சித்தார்த்தன் இதை புளு கிராஸ் அமைப்பு சேர்மன் சின்னி கிருஷ்ணாவிடம் வழங்கினார்.

இந்தியன் ஆயில் தமிழ்நாடு புதுச்சேரி மாநில எக்ஸிகியூடிவ் டைரக்டர் பி ஜெயதேவன், தலைமை பொதுமேலாளர் கே பாஸ்கர், பொது மேலாளர் எஸ் சீதாராமன் மற்றும் மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த கால்நடை ஆம்புலன்சில் அதிக காயம்பட்ட கால்நடைகளை மீட்கவும், எளிதாக தூக்க ஹைட்ராலிக் லிப்ட் பொருத்தப்பட்டுள்ளது. புளூ கிராஸ் இந்த ஆம்புலன்ஸ் உதவியால் அடிபட்ட நலிவுற்ற மூத்த விலங்குகளை தேடிக் கொண்டு வர இந்த ஆம்புலன்ஸ் உதவும். மாடு, குதிரை போன்றவற்றிற்கு விபத்து காலத்தில் உடனடியாக சென்று காப்பாற்றி சிகிச்சை அளிக்க புளூ கிராஸ் ஏற்பாடு செய்யும் என்று இந்தியன் ஆயில் எக்சிகியூடிவ் டைரக்டர் சித்தார்த்தன் தெரிவித்தார்.

வாயில்லா பிராணிகளுக்கு உதவும் புளூ கிராஸ் அமைப்புக்கு இந்த ஆம்புலன்ஸ் உதவியாக இருக்கும். தெருவில் அனாதையாக நிற்கும் நாய், பூனை போன்றவற்றை மீட்டு பாதுகாக்க புளூ கிராஸ் இந்த ஆம்புலன்சை பயன்படுத்தும் என்றார் சின்னி கிருஷ்ணா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *