சிறுகதை

காலம் மாறுது; கணக்கும் மாறுது ஆர்.எஸ்.மனோகரன்

அரசாங்க வேலையில் இருக்கும் தன் மகளுக்கு ரகுராமன் வரன் பார்த்தபோது பல நிபந்தனைகளை அவள் போட்டாள். மாப்பிள்ளை சென்னையிலேயே பிறந்து படித்து வளர்ந்து நிலையான வேலையில் இருக்க வேண்டும். வெளிநாட்டில் வேலை பார்க்கக் கூடாது.
காபி கொண்டு வந்து கொடுப்பது காலில் விழுந்து வணங்குவது பாட்டு பாடுவது எல்லாம் முடியாது.
கேஷுவலாக ஒரு பொதுவான இடத்தில் பொண்ணையும் மாப்பிள்ளையையும் அறிமுகப்படுத்த வேண்டும்.வரதட்சணை கேட்கக் கூடாது;
கல்யாண செலவு சரி பாதி மாப்பிள்ளை வீட்டார் செய்ய வேண்டும். வேலைக்கு போவதால், மூன்று வேளையும் நான் சமையல் பண்ணிக் கொண்டிருக்க முடியாது. மாமியார் அல்லது வேலைக்காரி தான் சமையலை சமாளிக்க வேண்டும்.
அப்புறம்,
முதலில் நான் பல விசயங்களை அவனிடம் பேசிப் பார்ப்பேன். ஒத்து வந்தால் சரி சொல்வேன் என்றாள்.
முதலில், வாட்ஸ்அப் பில் வரனின் போட்டோ வந்தால் தலையை ஜூம் பண்ணி முடி அடர்த்தி பார்ப்பாள்; ப்ரோஃபைல் அனுப்பி இருந்தால் அதில் வரனின் ஆங்கில அறிவை சோதனை செய்வாள்..இவன், அண்ணா பல்கலைகழகத்தில் பொறியியல் படித்தேன் என்று சொல்றானே; நிச்சயம் இருக்காது. செக் பண்ணுங்கோ என்பாள்.
அதே மாதிரி அவன் ஒரு தனியார் கல்லூரியில் தான் படித்திருப்பான்.
இது வேலைக்கு ஆகாது என்பாள்.
ரகுராமன் வெறுத்துப் போயிருந்த நேரத்தில் எல்லாவற்றுக்கும் சம்மதம் சொல்லி ஒரு இடம் வந்தது. அவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.
இதுபற்றி மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்ட போது அவர்கள் ஒரு செய்தியை சொன்னார்கள்.
இதோ அந்தச் செய்தி
“பெண்கள் சதவீதம் ஆயிரம் ஆண்களுக்கு எண்ணூறு என குறைந்து உள்ளது.”
ரகுராமனுக்கு ஏற்பட்ட ஆச்சர்யம் தங்கவில்லை.
மகள் நிபந்தனைக்கு ஏற்ற வரன் கிடைக்கும் என்ற நம்பிக்கை துளிர் விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *