போட்டித் தேர்வுகளால் தான் இப்போது அரசாங்க வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்று தெரிந்து கொண்ட படித்தவர்கள் எல்லாம் நூல் நிலையங்கள், பயிற்சி நிறுவனங்கள் வீட்டிலிருந்து என்று எப்படியாவது படித்து தேர்ச்சி பெற்று அரசாங்க வேலையில் அமர்ந்து விட வேண்டும் என்று நிறைய பேர் பிடிவாதமாக இருக்கிறார்கள்.
அதில் ஒரு சிலர் வெற்றி பெறுகிறார்கள். ஒரு சிலர் தோல்வியடைகிறார்கள். ஒரு சிலர் கடைசி வரை முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
குகனும் தான் படித்த படிப்புக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்று அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருந்தான். அரசாங்க வேலையைப் பிடித்து விட்டால் சாகும் வரைக்கும் வாழ்க்கைக்கு உத்தரவாதம். செத்த பிறகு கூட மனைவி குழந்தைகளுக்கு பணம் சேர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் குகன் ஒரு பயிற்சி நிறுவனத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தான்.
பள்ளி , கல்லூரியில் படிப்பது போல காலையில் 10 மணிக்கு எல்லாம் வந்துவிடும் குகன் மாலை 6 மணிக்கு தான் வீடு திரும்புகிறான் அவனுடன் அவன் எண்ணத்தை ஒத்த நண்பர்கள் சிலர் சேர்ந்து கொண்டார்கள்.
குகனும் அவன் நண்பர்களும் கூட்டுப்பயிற்சி அதாவது குரூப் டிஸ்கசன் என்று படித்து தேர்ச்சி பெற்று விட வேண்டும் என்று ஈடுபட்டிருந்தார்கள்.
மதிய உணவு இடைவேளையில் அவரவர்கள் கொண்டுவரும் சாப்பாட்டைப் பகிர்ந்து உண்டு படித்து வந்தார்கள்.
ஒரு நாள் மதிய உணவு இடைவேளையில் குகன் கொண்டு வந்திருந்த மதியச் சாப்பாட்டை நண்பர்கள் பகிர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.
என்ன குகன் மதிய லஞ்ச் ரொம்ப நல்லா இருக்கு. அம்மா சமச்சதா என்று கேட்க
இல்ல இல்ல அம்மா சமைக்கல என்னோட மனைவி சமைச்சது என்றான்.
என்னது மனைவி சமைச்சதா ? உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா ? என்று கேட்க
ஓ ஆயிருச்சு என்றான் குகன்
பரவாயில்ல. வேலை கிடைக்காமலே உனக்கு கல்யாணம் ஆயிருச்சு. எங்களுக்கெல்லாம் வேலை கிடைச்சா தான் கல்யாணம்னு சொல்லிட்டாங்க. அதனால இன்னும் நாங்க கட்ட பிரம்மச்சாரி தான் இருக்கம் என்று நண்பர்கள் சொல்லிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தார்கள்.
உன் மனைவி இப்போ என்ன பண்றாங்க? என்று நண்பர்கள் கேட்டபோது
குகன் சொன்ன பதிலால் சில நண்பர்கள் கிறங்கி கீழே விழுந்தார்கள்.
என்னாேட வைஃப் வொர்க் பண்றா. மாச ஒரு லட்ச ரூபாய் சம்பளம் என்று சொல்ல
என்னது ஒர்க் பண்றாங்களா? காலம் மாறிப்போச்சு. முன்னாடி எல்லாம் கணவன் வேலை செஞ்சு மனைவிய படிக்க வைப்பாங்க. இப்போ என்னடான்னா மனைவி வேலை செஞ்சு கணவன படிக்க வைக்கிறாங்க. என்ன கால கொடுமை இது என்று வருத்தப்பட்ட நண்பர்கள் உணவு சாப்பிட ஆரம்பித்தார்கள் .
அப்போது குகனின் செல்போன் ரிங் ஆனது.
என்ன கொடுத்துவிட்ட சாப்பாடு எல்லாம் சாப்பிட்டீங்களா? இல்ல உங்கள மாதிரி வேலை வெட்டி இல்லாம படிப்பு அரசாங்க வேலைன்னு லட்சியம் இல்லாம கனவு உலகத்துல படிச்சுக்கிட்டு இருக்கிற காவாலி கூட இருக்கிங்க என்று குகனின் மனைவி பேசியது அருகில் அமர்ந்திருந்த நண்பர்களுக்கு மெல்லக் கேட்டது.
வாயில் வைத்து சோற்றுப் பருக்கையை விழுங்க முடியாமல் விக்கி நின்றார்கள் குகன் என் நண்பர்கள்.
குகன் மனைவி கேட்ட கேள்விக்கு எதிர் மாறாக பதில் சொன்னான்.
அவன் அசடு வழிந்து சிரிக்கும் சிரிப்பைப் பார்த்த நண்பர்கள் எல்லாம் தெரியும் சாப்பிடு என்று குகனை எகிறினார்கள்.
ஐந்து மணிக்கு எங்க போகாமல் சரியாக வீட்டுக்கு வந்து விட வேண்டும் என்று கட்டளையும் இட்டாள் மனைவி .
இதைக் கேட்ட நண்பர்களும் குகனும் திருதிருவென விழத்தார்கள்.
….
ராஜா செல்லமுத்து
…