செய்திகள்

காற்று மாசு காரணமாக குறையும் இந்தியர் ஆயுள் காலம்: ஆய்வறிக்கை

நியூயார்க், ஜூன் 14–

காற்று மாசு காரணமாக மனித ஆரோக்கியம் ஆபத்தனா நிலைக்கு சென்று கொண்டிருப்பதாகவும், இந்தியாவின் ஆயுட்காலம் சராசரியாக 6.9 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அண்மை ஆய்வு ஒன்று அறிக்கை அளித்துள்ளது.

சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம், காற்று மாசு குறித்து ஆய்வு நடத்தி காற்றின் தரவரிசை அட்டவணையை வெளியிட்டள்ளது. இதில் இந்தியாவில் ஏற்படுள்ள காற்று மாசுபாடு மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 1.8 ஆண்டுகள் ஆயுள்காலம் குறைகிறது என்றும் புகைப்பிடித்தல் காரணமாக 1.5 ஆண்டுகள் ஆயுட்காலம் குறைவதாகவும் தெரிவித்துள்ளது.

முதல் 5 மாநிலங்கள்

கடந்த ஆண்டு AQLI இன் ஆய்வின்படி சராசரியாக 9.7 ஆண்டுகள் ஆயுட்காலம் இழந்த டெல்லி, மிகவும் மாசுபட்ட மாநிலமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இது நோயின் சுமையைக் குறைப்பதற்காக ஒரு கன மீட்டருக்கு 10 மைக்ரோகிராம் என்ற பழைய திருத்தப்பட்ட உலக சுகாதார அமைப்பின் (WHO) இலக்கை அடிப்படையாகக் கொண்டது என குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு ஆய்வின்படி உத்திரபிரதேசம், பீகார், அரியானா மற்றும் திரிபுரா ஆகியவை காற்று மாசுப்பட்ட மாநிலங்களில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன என தெரிவித்துள்ளது.

அதேபோல் போல் உலகளவில், வங்காளதேசத்திற்கு முன்னதாக இந்தியா இரண்டாவது மிகவும் மாசுபட்ட நாடாக உள்ளது என அதிர்ச்சியளித்துள்ளது. மோசமான காற்று காரணமாக 2020 இல் ஆயுட்காலம் 6.9 ஆண்டுகள் குறைக்கப்பட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளது. இதேபோல், நேபாளம் 4.1 ஆண்டுகள், பாகிஸ்தான் 3.8 ஆண்டுகள் மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு 2.9 ஆண்டுகள் தங்களது ஆயுட்காலத்தை இழந்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.