கனடா பல்கலைக்கழக ஆய்வுத் தகவல்
ஒட்டாவா, நவ. 11–
காற்றில் கலக்கும் மீச்சிறு துகள் மாசுபாட்டால் ஆண்டுதோறும் 57 லட்சம் பேர் அகால மரணமடைந்து வருவதாக கனடாவின் மெக்கில் பல்கலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
காற்றில் கலக்கும் மீச்சிறு துகள் மாசுபாடு காரணமாக, ஆண்டுதோறும் 57 லட்சம் போ அகால மரணமடைந்து வருவதாக கனடாவின் மெக்கில் பல்கலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:–
மேலும் 15 லட்சம் பேர்
காற்றில் இருக்கும் 2.5 மைக்ரான் மற்றும் அதற்குக் குறைவான நீள அகலம் கொண்ட மீச்சிறு துகள் மாசுக்களை, (பிஎம்2.5) நீண்ட நேரம் சுவாசிப்பதால் ஆண்டுதோறும் 42 லட்சம் பேர் பலியாகி வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியிருந்தது. எனினும், இது தொடா்பாக தற்போது மேற்கொள்பட்டுள்ள ஆய்வில், பிஎம்2.5 மாசுபட்டால் கூடுதலாக 15 லட்சம் பேர் பலியாகி வருவதாகத் தெரிய வந்துள்ளது.
ஆபத்தில்லாத அளவு என்று இதுவரை கருதப்பட்ட குறைந்த அளவில் பிஎம் 2.5 மாசு, காற்றில் கலந்திருந்தாலும் கூட, அது மரணத்துக்கான அபாயத்தை ஏற்படுத்துவது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.