வாழ்வியல்

காற்றினால் இயங்கும் டர்பைன்கள் மூலம் மின்சார சக்தி உருவாக்கப்படுவது எப்படி ?


அறிவியல் அறிவோம்


காற்றினால் இயங்கும் டர்பைன்கள் ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் முதன் முதலில் உருவாக்கப்பட்டன. 1830 களில் மின்சார ஜெனரேட்டர் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மின்சாரத்தினை உற்பத்தி செய்ய பொறியிலாளர்கள் காற்றின் சக்தியினைப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தனர்.

காற்றின் மூலம் மின்சாரத்தினை உற்பத்தி செய்வது இங்கிலாந்தில் 1887 இலும் அமெரிக்காவில் 1888 இலும் இடம்பெறத் தொடங்கியது. ஆனால் நவீன காற்றுச் சக்தி டென்மார்க்கிலேயே முதன் முதலில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இங்கே கிடையான அச்சில் இயங்கும் காற்று டர்பைன்கள் 1891 இல் உருவாக்கப்பட்டன. மேலும் 1897 ஆம் ஆண்டில் 22.8 மீட்டர் காற்று டர்பைன் முதலில் இயங்க ஆரம்பித்தது.

சுழலும் காற்றினால் உருவாக்கப்படும் அசைவியக்க சக்தியினை (கைநெடிக்) பயன்படுத்தி மின்சாரத்தினை உற்பத்தி செய்யக் காற்று பயன்படுத்தப்படுகின்றது. காற்றினால் இயங்கும் டர்பைன்களைப் பயன்படுத்தி அல்லது காற்றின் சக்தியினைச் சேமித்துப் பாதுகாக்கும் முறைமைகள் மூலம் இது மின்சார சக்தியாக நிலைமாற்றப்படுகின்றது.

முதலில் காற்று டர்பைனின் தழைகளைத் (பிளேடுகளை) தாக்குகின்றது. இதனால் தழைகள் சுழன்று அதனுடன் இணைக்கப்பட்டுள்ள டர்பைனைச் சுழற்றுகின்றன. இது ஜெனரேட்டருடன் பொருத்தப்பட்டுள்ள அச்சினை நகர்த்துவதன் மூலம் அசைவியக்க சக்தியினை சுழலும் சக்தியாக மாற்றுகின்றது. பின்னர் இதனால் மின்காந்தவியல் மூலம் மின்சார சக்தி உருவாக்கப்படுகின்றது.


Leave a Reply

Your email address will not be published.