செய்திகள்

கார் மீது லாரி கவிழ்ந்து விபத்து; பெண் டாக்டர் உடல் நசுங்கி பலி

சிவகங்கை, செப். 10–

சிவகங்கை அருகே கார் மீது லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த ஆதப்பன் என்பவரது மனைவி இந்திரா (வயது 68). தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். இருவரும் வெளிநாட்டில் வசிக்கின்றனர். ஆதப்பன் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் இந்திரா மட்டும் வீட்டில் தனியே வசித்து வந்துள்ளார்.

உடல் நசுங்கி பலி

இந்த நிலையில், இந்திரா நேற்று தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு, காரில் நாட்டரசன்கோட்டை சாலை வழியே வீட்டுக்கு வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த லாரி டிரைவர், கார் மீது மோதாமல் இருக்க பிரேக் அடித்துள்ளார். இதில் கார் மீது லாரி கவிழ்ந்து நசுங்கியது. காருக்குள்ளே இருந்த மருத்துவர் இந்திரா உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 3 மணி நேரம் போராடி இந்திராவின் உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரி டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *