சேலம், அக். 26
சேலம்- – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்தம்பட்டி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானத்தில் 9 மாத குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் – -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்தம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்த காரின் டயர் திடீரென வெடித்ததில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் மேம்பால சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரில் இருந்து 9 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது. குழந்தையின் பெற்றோர்கள் தீபக் அழகப்பன் மற்றும் தெய்வானை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.