காரைக்குடி, ஏப். 11–
காரைக்குடியில் நாளை நடைபெற இருந்த அமித்ஷாவின் வாகனப் பேரணி நிகழ்ச்சி திடீர் ரத்தாகியுள்ளது.
இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை தமிழ்நாடு வரும் நிலையில் காரைக்குடியில் அவர் பங்கேற்க இருந்த வாகன பேரணி ரத்தாகியுள்ளது. மோடி தலைமையிலான பாஜகவின் ரோடு ஷோவுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு இல்லை என கூறப்படுகிறது.
பண மோசடி
இந்நிலையில், மைலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தின் தலைவராகவும் மேலாண்மை இயக்குநராகவும் உள்ள, சிவகங்கை பாஜக வேட்பாளரான வின் டிவி அதிபர் தேவநாதன், 525 கோடி ரூபாய் இந்து நிதி நிறுவனத்தில் நிதி மோசடி செய்ததாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளதாலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் மதுரையில் நாளை நடைபெறும் வாகனப் பேரணியில் திட்டமிட்டபடி அமித் ஷா பங்கேற்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை இரவு 7.30 மணி அளவில் அமித்ஷா சாமி தரிசனம் செய்கிறார். காரைக்குடி வாகனப் பேரணி ரத்து செய்யப்பட்ட நிலையில் திருமயத்தில் உள்ள சிவன் கோயிலில் தரிசனம் செய்கிறார்.