செய்திகள்

காரியாபட்டியில் கொரோனாவை தடுக்க கபசூர குடிநீர் வினியோகம்

Spread the love

காரியாபட்டி,ஏப்,02–

காரியாபட்டியில் கொரோனா வைரஸ் காய்ச்சல் வராமல் இருக்க தொண்டு நிறுவனங்கள் சார்பாக நோய் எதிர்ப்பு கசாயம் வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இயங்கி வரும் தொண்டு நிறுவனங்கள் சார்பாக கொரோனா வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்க பல்வேறு பணிகளை செய்து வருகிறது. முதற்கட்டமாக கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் பொதுமக்கள் கூடுகின்ற இடங்களில் கொரோனா வைரஸ் வராமல் இருக்க எவ்வாறு கை கழுவது என்ற விழிப்புணர்வு செயல்விளக்க முகாம்கள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள சித்த மருத்துவ கசாயம் வழங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசூர குடிநீர் சூரணம் மற்றும் வாத சுரக் குடிநீர் ஆகியவை காரியாபட்டி யூனியன் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் ரவிக்குமார் கசாயம் வழங்கி தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், தீயணைப்பு அலுவலர் கோபால்சாமி, எஸ்.பி.எம் டிரஸ்ட் நிறுவனர்,அழகர்சாமி சுரபி அறக்கட்டளை நிறுவனர் விக்டர், ஜனசக்தி பவுன்டேஷன் நிறுவனர் சிவக்குமார் சமூக ஆர்வலர் சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *