செய்திகள்

காரப்பாக்கம் கற்பக ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

காஞ்சீபுரம்,மார்ச்.17-

காரப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கற்பக ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் கலந்து கொண்டார்.

சென்னை அடுத்த காரப்பாக்கம் ஒஎம்ஆர் தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கற்பக ஈஸ்வரர், ஸ்ரீ ராமர் ஸ்ரீ லஷ்மணன் ஸ்ரீ சீதா ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஏனைய பரிவார ஆலய கோவில் உள்ளது.

பல்வேறு சிறப்புகளை பெற்ற இக்கோவிலின் கும்பாபிஷேகம் – 12ம் ஆண்டு குடமுழுக்கு விழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் உள்பிரகாரத்தில் 7 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அதில் 108 மூலிகை பொருட்கள் போடப்பட்டது. அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஓத – யாகம் குண்டத்தில் விசேஷ புஜைகள் நடந்தன. இன்று காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை கொண்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார்கள். அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் காரப்பாக்கம் ஈஸ்வரா! காரப்பாக்கம் ஈஸ்வரா! என்று பக்தி கரகோஷம் எழுப்பினார்கள். பிறகு, கும்பாபிஷேக நீர் பக்தர்களின் மீது தௌிக்கப்பட்டது.

இக் கும்பாபிஷேகத்தில், காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சிட்லபாக்கம் ச.ராசேந்திரன், அம்மா பேரவை இணைச் செயலாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் எம்.பி., சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழக செயலாளர் கே.பி.கந்தன், காஞ்சீபுரம் மத்திய மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் வி.பக்தவச்சலம், டாக்டர் ஸ்ரீ ப்ரத்யங்கிரா சுவாமிகள், திருவடிசுலம் ஸ்ரீ மதுரை முத்து சுவாமிகள், செல்வராஜ் குருசாமி, காஸ்மோஸ் கிரானைட் சரத்குமார், சென்னை தெற்கு மண்டல காவல் துறை இணை ஆணையர் மகேஸ்வரி, ஆர்.கஜேந்திரன், சோழிங்கநல்லூர் கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.ஞானமூர்த்தி, மற்றும் ஆன்மீக பிரமுகர்கள், அதிமுகவினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர். பிறகு வந்திருந்த அனைவருக்கும் கோவில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோவிலில் பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானங்களை லியோ என்.சுந்தரம் வழங்கினார்.

இந்த கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும், அறங்காவலர் தலைவரும், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி அண்ணா தி.மு.க. செயலாளருமான லியோ என்.சுந்தரம் வெகு சிறப்பாக செய்து இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *