சிறுகதை

காரணம்- ஆவடி ரமேஷ்குமார்

கோவில் குருக்கள் சீதாராமனின் வீடு.

ஒரு சோபாவில் குருக்களும் அவர் மனைவியும் அமர்ந்திருக்க, எதிர் சோபாவில் ராகவனும் சாந்தியும் அமர்ந்திருந்தார்கள்.

சாந்தி தான் ஆரம்பித்தாள்.

” சாமி, எங்க மகனுக்கு அக்டோபர் மாதம் 16- ம் தேதி

கல்யாணம் வச்சிருக்கோம்.

நீங்க எப்படி எங்க கல்யாணத்தை நடத்தி வச்சீங்களோ அதே மாதிரி எங்க மகனுக்கும் வந்து கல்யாணத்தை நடத்தி வைக்கணும்”

” உங்க பிள்ளையாண்டானுக்கு கல்யாணமா…ரொம்ப சந்தோஷம்.ஆனா…அக்டோபர்

மாதம் 16- ம் தேதி…” என்று

இழுத்தார் குருக்கள்.

‘ ஏன் சாமி?” – ராகவன்.

” அது வந்து…நீங்க தப்பா நினைக்கப்படாது. அந்த தேதியில நான் வேற ஒரு

கல்யாணத்துக்கு அட்வன்ஸ்

வாங்கிட்டேன்…”

சாந்தியும் ராகவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

” இப்ப என்னங்க பண்றது?

வேற தேதி மாத்தலாம்னா

மண்டபம் கிடைக்காதே”

ராகவனிடம் முனகினாள் சாந்தி.

குருக்கள் தன் டைரியை புரட்டியபடி இருந்தார். அதை

அவரின் மனைவி கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

” சரிங்க சாமி.நாங்க வேற ஏற்பாடு பண்ணிக்கிறோம்” என்று கும்பிட்டபடி எழுந்து

ஏமாற்றத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

அப்போது குருக்களின் மனைவி அவரிடம் கேட்டார்:

” ஏங்க, அக்டோபர் மாதம் 16- ம் தேதி டைரில காலியாத்தானே

இருக்கு. ஏன் வேற ஒரு கல்யாணத்துக்கு அட்வான்ஸ் வாங்கிட்டேன்னு பொய் சொன்னீங்க?”

” அது வந்து பார்வதி, இந்த ராகவனுக்கும் சாந்திக்கும்

நான் தான் மந்திரங்கள் ஓதி

சடங்குகள் செய்து நல்லபடியா

கல்யாணம் பண்ணி வச்சேன்.

ஆனா இந்த ராகவன் ஆறேழு

வருஷத்துக்கு முன்னாடி சாந்திக்கு தெரியாம ரகசியமா வேற ஒரு பொண்ணுக்கு தாலி கட்டி வேற ஒரு ஊர்ல குடும்பம் நடத்திட்டு வந்தார். இந்த விஷயம் எப்படியோ சாந்திக்கு தெரிஞ்சுடுச்சு. ரெண்டு பேரும்

பிரிஞ்சுட்டாங்க. இப்ப மகன் கல்யாணத்துக்காக பெரியவங்க கேட்டுக்கிட்டதால தற்காலிகமாக ஒண்ணு சேர்ந்திருக்காங்க. இந்த விஷயத்தை சாந்தியோட அப்பா தான் போன மாசம் என்கிட்ட சொன்னாரு. எனக்கு இந்த விஷயம் மனசுக்கு நெருடலா இருக்கு. ரொம்பவும் வருத்தமாவும் இருக்கு. நான் கல்யாணம்

பண்ணி வச்சவங்கள்ல இவங்களைத் தவிர எல்லோரும் ஒற்றுமையா இருக்காங்க. அதான் இவங்க மகனுக்கு கல்யாணம் பண்ணி

வைக்க தயங்கி அப்படியொரு

பொய்யை சொல்லிட்டேன்” என்றார் குருக்கள்.

மனைவி மெய்சிலிர்த்தாள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *