சிறுகதை

காரணத்தோடு | ராஜா செல்லமுத்து

பிரதான சாலையில் நடுவே ஒரு மனிதர் எப்போதும் ஒரே இடத்தில் நின்று கொண்டே இருப்பார். அவர் காலை மாலை என்று வித்தியாசம் இல்லாமல் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருப்பார். அவர் எதற்கு நிற்கிறார்? ஏன் நிற்கிறார்? என்று யாருக்கும் தெரியாது.

ஆனால் அவர் நவநாகரீக உடையில் நின்று கொண்டிருப்பார். அங்கும் எங்கும் நகராமல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பார். பார்ப்பவர்களுக்கு அவர் எதற்காக அங்கே நிற்கிறார்? என்று முதலில் தோன்றாது.

அடிக்கடி அந்த தெருவில் சென்று வருபவர்களுக்குத் தான் தெரியும் .அவர் தினந்தோறும் அங்கு இருக்கிறார் என்று . ஒரு முறை அந்த சாலையின் வழியே செல்பவர்களுக்கு அவர் சாதாரணமாகத்தான் நின்று கொண்டிருக்கிறார் என்பது தெரியும்.

ஆனால் அந்தப் பிரதான சாலையில் திருப்பத்தில் நிற்கும் அவரை அந்தத் தெரு வழியே போகிறவர்கள் அவர் நிற்பது அவர்களுக்குத் தெரியும். அந்தத் தெருவிற்கு இரண்டு முறை வந்த சைமன் முதலில் கேட்கத் தயங்கியவன்…. பின்னர் கேட்டுவிட்டான்

ஏன் குமார்? ஏன் இவர் இந்த இடத்தில் நினனுருக்காரு என்று கேட்டான்.

ஓ அதுவா? அவர் நிக்குறதில ஒரு காரணம் இருக்கு. ஒரு அர்த்தம் இருக்கு. அவர் நிக்கிறதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு என்று குமார் சொன்னார்.

அப்படி என்ன? இவர் நிக்கிறதுக்கு பின்னாடி வரலாறு என்று சைமன் கேட்டான்.

டீ சர்ட், ஜீன்ஸ் பேண்ட் என்று மிக நேர்த்தியாக நின்று கொண்டிருந்தார் அந்த டீசன்ட் மனிதர்.

சைமன் அவருடைய பேர் என்னன்னு தெரியாது. ஆனா அவரே நிக்கிறார். இங்கே எதுக்காக நிற்கிறார்கள். அவர பாக்குறவங்க அவருக்கு என்ன தருவாங்க. அப்படின்னு எனக்கு தெரியும் என்று குமார் சொன்னான்.

அந்த டீசன்ட் மனிதனுக்கு அந்த வழியாகப் போன ஒருவர் 100 ரூபாய் கொடுத்தார். இன்னொருவர் 50 ரூபாய் கொடுத்தார். இதையெல்லாம் சமனும் குமாரும் பார்த்துக்கொண்டே நின்றார்கள்.

பார்த்தியா? இதுதான் இவர் தினந்தோறும் இந்த வழியா போற அவருக்கு தெரிஞ்சவங்க பணம் கொடுத்துட்டு போவாங்க. இது பிச்சை இல்லை. கௌரவம் அவருக்கு செய்ற மரியாதை என்று குமார் சொன்னான்.

என்னது மரியாதையா? என்ன சொல்ற குமார் சொல்ற என்று சைமன் ஆச்சரியமாகக் கேட்டான்.

ஆமா சைமன். இவரு ஒரு பெரிய கம்பெனி வைத்து நடத்தினார். நிறைய பேருக்கு சம்பளம் கொடுத்து இருக்காரு. ஒரு முதலாளியா அமர்ந்திருக்கிறாரு. யாரோ சில பேர் இவரை ஏமாத்தி இருக்காங்க. அதில மனசு உடைஞ்சு போன மனுஷன் தான் இப்படி ஆயிட்டார். இப்போ இத்தனை தூரம் வரை பாக்குற நீ சிரிச்சா போதும். உன்கிட்ட அவர் எதிர்பார்ப்பார் . ஆனா அவரு மத்தவங்க கிட்ட பணம் வாங்குவதை தப்பா நினைக்கவில்லை.

நம்ம இவ்வளவு டீசண்டா இருந்துட்டு பணம் கேட்கிறோமே. தவறா நினைப்பார்களோ? என அவரு அதைப் பத்தியும் திங்க் பண்றதில்லை. ஏதோ மனம் போன போக்கில் வாழ்ந்துட்டு இருக்கார். இவர் நினைச்சா ஏதோ ஒரு கம்பெனியில வாட்ச்மேன் வேலை கூடப் பார்க்கலாம்.

ஆனா என்ன நினைக்கிறார்ன்னு தெரியல. காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் நின்னுகிட்டே இருப்பார். போறவங்க வர்றவங்க இவருக்கு ஏதாவது கொடுத்துட்டு போவாங்க என்று குமார் சொல்லிக் கொண்டிருக்கும்போது

ஒருவர் ஒரு 100 ரூபாயை அவர் கையில் கொடுத்தார். ஒருவர் வாழைப்பழம் நிரம்பிய பையை கொடுக்க அதை வாங்கிய அந்த டீசண்ட் மனிதன் சிரித்துக்கொண்டே சென்று கொண்டிருந்தார்.

அந்த மனிதனுக்கும், சைமன், குமார் போவதற்கும் கொஞ்ச தூரம் இருந்தது. வெகுநேரமாக அந்த டீசன்ட் மனிதனின் நடவடிக்கையை கவனித்துக் கொண்டிருந்த சைமன், குமாரும் அந்த மனிதரிடம் சென்றார்கள்

சைமன் அவரைப் பார்த்து சிரித்தான்.

அந்த டீசன்ட் மனிதர், ஹலோ என்று சைமனுக்கு கை கொடுத்தார்.

ஹலோ எப்படி இருக்கீங்க? என்று சைமன் கேட்டான்.

நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க என்று பதிலுக்கு கேட்டார் அந்த டீசண்ட் மனிதர்.

சைமன் தன் பர்சில் இருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்து அந்த டீசன்ட் மனிதனுடைய கையில் திணித்தான். புன்முறுவலோடு அதை வாங்கிக் கொண்ட மனிதன்,

தேங்க்ஸ் என்று அவனுக்குச் சொன்னார்.

மறுபடியும் யாரையோ எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார் அந்த டீசன்ட் மனிதர்.

இருவரும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றார்கள்.

மறுநாள் சைமன் அந்த வழியாகச் சென்றான். அந்த டீசன்ட் மனிதர் இப்போது சைமனைக் கண்டுகொண்டார். சைமன் பார்த்து புன்முறுவல் பூத்தார் .

அருகில் சென்ற சைமன் அந்த டீசன்ட் மனிதன் கையில் ஒரு ஐம்பது ரூபாய் திணித்தான். அதை சந்தோஷமாக வாங்கிய இந்த டீசர்ட் மனிதன் முகத்தில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பதுபோல் இருந்தது.

அவரின் முகத்தைப் பார்த்த சைமன் இந்த உலகத்தில் இருக்கும் மனிதர்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள். இந்த மனிதனுக்கு ஒரு பிரச்சனை. பிரச்சனைகளை பிரச்சினையாகப் பார்த்தால் தான் பிரச்சனை. அதை அப்படியே விட்டு விட்டால் அது வெறும் பெயர்தான் என்று எண்ணியபடியே சைமன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

அந்தப் டீசன்ட் மனிதன் யாரையோ எதிர்பார்த்து அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *