சினிமா

காமெடி படத்தில் நயன்தாரா!

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வளம் வரும் நடிகை நயன்தாரா, தமிழில் முழுக்க முழுக்க ஒரு காமெடி படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நயன்தாரா. தமிழில் இவர் நடிப்பில் நெற்றிக்கண் மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்கள் வெளிவர காத்திருக்கின்றன.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தாவுடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துவரும் நயன்தாரா மேலும் 3 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

இதில் முழுக்க முழுக்க காமெடி கதைக்களம் கொண்ட படமும் ஒன்று என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை தென்னாலிராமன், எலி போன்ற திரைப்படங்களை இயக்கிய, யுவராஜ் தயாளன் இயக்கவிருக்கிறார். இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *