சிறுகதை

கான்ரன் ஸ்மித் சாலை..!: ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

சாலை 87


கோபாலபுரம் பகுதிக்கு வந்த வாசுவுக்கு அங்கிருந்த ஒரு பெயர்ப் பலகை வியப்பைத் தந்தது. காரன் ஸ்மித் சாலை. இது என்ன காரன் ஸ்மித் சாலை, வாசிக்கும் வார்த்தை வாயில் நுழைய மறுக்கிறதே? யார் இந்தக் காரன்

ஸ்மித் ? என்று கன்னிமாரா நூலகத்திற்குச் சென்று அதைப் பற்றிய புத்தகத்தைத் தேடினான், வாசு.

‘ எரிக் கான்ரான் – ஸ்மித் 1890 ஆண்டு டிசம்பர் 3–ம் தேதி பிறந்தார். ஆக்ஸ்போர்டில் உள்ள கார்பஸ் கிறிஸ்டி கல்லூரியில் படித்தார். 1915–ம் ஆண்டு இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, சென்னை துணை ஆட்சியர் மற்றும் மாஜிஸ்திரேட், லார்ட் வில்லிங்டன் மற்றும் கோஷன் போன்ற சென்னை ஆளுநர்களின் தனிச் செயலாளர். சென்னை, மாநகராட்சியின் முதல் ஐசிஎஸ் கமிஷனராக 1928 மேல் 1931 வரை பணியாற்றியவர், இவரது பணிகள் மற்றும் சென்னை மாநகராட்சியின், முதல் ஆணையர் சென்னை நகர மேம்பாட்டில் இவரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவர் 1928 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் கமிஷனராகப் பொறுப்பேற்றார். 1931 ஆம் ஆண்டு ஜனவரி 13 முதல் 19 வரை மாநகராட்சி கல்விக் கண்காட்சியை நடத்தினார். இவரின் சேவையைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது’.

‘இவரது பெயரில் காரன் ஸ்மித் சாலை, கோபாலபுரம் மற்றும் புரசைவாக்கம் பகுதியில பகுதியில் கான்ரான் ஸ்மித் நகர், ஸ்மித் சாலை பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா அருகே தொடங்கி, ஒயிட்ஸ் சாலையை இணைக்கிறது.கோபாலபுரம் அருகே கான்ரான் ஸ்மித் சாலை, என்ற பெயரில் சிறிய சந்தும் இருக்கிறது. ஒருவருக்கு இத்தனை இடங்களில் சாலைகள் இருப்பது இவரின் சேவையைக் குறிக்கிறது ‘

‘இவர் சென்னை மாநகராட்சி வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தவர் .குறிப்பாக தெருக்களுக்குப் பெயரிடுதல், மற்றும் நகரப் பராமரிப்பில் இவரது பங்களிப்பு அதிகமாக இருந்தது. இதனால் இவரின் சேவையைப் பாராட்டியே இந்த சாலைக்கு பெயர் வைக்கப்பட்டது’ என்று வாசிக்க ஆரம்பித்தான், வாசு

‘ரிப்பன் கட்டிடத்தில் உள்ள சிலை அங்கு அவர் பணியாற்றிய காலத்தில் அவருடைய பணியைப் பாராட்டி ரிப்பன் கட்டிடத்தில் ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது .சிஐஇ பட்டம் பெற்றவர். சென்னை உள்ளாட்சி சுயாட்சித் துறை செயலாளராக இருந்தவர்’ என்று வாசிக்க ஆரம்பித்தான், வாசு, உள்ளாட்சித் துறை செயலாளராக இரண்டாம் உலகப் போரின் போது இந்திய அரசின் உள்துறை செயலாளர் ,பின்னர் போர் போக்குவரத்து செயலாளராகவும் இருந்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1947–ம் ஆண்டு ஓய்வு பெற்றார் .1960 இல் காலமானார். ரிப்பன் கட்டிடங்களின் நுழைவாயிலில் ஒரு சேவையைப் பாராட்டி இவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு சிஐஇ கம்பெனி ஆப் த ஆர்டர் ஆஃப் தி இந்தியன் எம்பயர் மற்றும் கேசிஐ இன் கமாண்டர் ஆஃப் தி இந்தியன் எம்பயர் போன்ற பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டன. சென்னையில் உள்ள ஸ்மித் சாலை மற்றும் கான்ரன் ஸ்மித் சாலை இவரது பெயரில் வைக்கப்பட்டுள்ளது ‘

என்பதை அறிந்தான், வாசு.

‘கல்வி மேம்பாடு, கல்வித்துறை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தார். மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 1931 ஆம் ஆண்டு ஒரு கல்வி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தார். அதில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போது ஆளுநரும் மேயரும் இதில் கலந்து கொண்டனர். மாநகராட்சி பள்ளிகளில் சாரணர் இயக்கத்தை விரிவுபடுத்தினார்.

இவரது மனைவி கிளாடிஸ் ஸ்மித் இருவரும் தோட்டக்கலையில் ஆர்வம் கொண்டவர்கள் . மெட்ராஸ் வேளாண் தோட்டக்கலைச் சங்கத்தின் தீவிர உறுப்பினராக செயல்பட்டனர். இவர் இந்திய சிவில் சர்வீஸ் இல் பணியாற்றிய மாஜிஸ்திரேட் மற்றும் ஆளுநரின் தனிச் செயலாளர் போன்ற பதவிகளை வகித்தார். 1940 ஆம் ஆண்டு டெல்லிக்கு மக்களவைக்குச் சென்ற, இவர் அங்கு உள்துறைச் செயலாளர் .பின்னர் போர்ப் போக்குவரத்துத் துறை செயலாளர். டெல்லி சென்ற பிறகு தன் இரண்டாவது பெயரான கான்ரன் என்பதை, தனது குடும்பப் பெயர்களோடு இணைத்து கான்ரன் ஸ்மித் என்று மாற்றிக் கொண்டார் ‘

‘ இங்கிலாந்தில் இவர் கிழக்கு இந்தியச் சங்கத்தில் தீவிர உறுப்பினராக இருந்தார். இந்தியாவுடன் ஆன உறவுகளைப் பேணுவதில் ஆர்வம் காட்டினார். கோபாலபுரம் பகுதியில் குடியிருப்பு மேம்பாட்டிற்கு குறிப்பிட்ட பங்களிப்பை வழங்கினார் ‘

‘கான்ரான் ஸ்மித் சாலை, லாயிட்ஸ் சாலையில் தொடங்கி, பீட்டர்ஸ் சாலை வரை செல்கிறது .இது இரு முக்கிய சாலைகளை இணைக்கும் ஒரு சிறிய சாலை. அவ்வை சண்முகம் சாலை என்று தற்போது அழைக்கப்படும் லாயிட்ஸ் சாலையின் மேற்கு முனையில் ராயப்பேட்டை மணிக்கூண்டுக்கு அருகில் சாலை பிரிகிறது. கோபாலபுரத்தின் உட்பகுதியில் உள்ள பீட்டர்ஸ் சாலையில் முடிவடைகிறது. இந்தச் சாலை ஒரு முட்டுச் சந்தாகவும் உள்ளது.

காரன் ஸ்மித் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள கோபாலபுரம் பகுதியில் விக்டோரியா மெமோரியல் ஹால், செம்மொழிப் பூங்கா, கதீட்ரல் சாலைக்கு அருகில் உள்ளது. கலைஞர் நூற்றாண்டு பூங்கா. இதுவும் கதீட்ரல் சாலையில் உள்ள பூங்கா. அமெரிக்க தூதரகம் கோபாலபுரம் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியத் தூதரகம்.

செங்காந்தள் பூங்கா, அவ்வை சண்முகம் சாலையில் பெரிய பூங்கா ஐ சி ஐ சி ஐ வங்கி, பெடரல் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட பல கிளைகள் இருக்கின்றன. கோபாலபுரம் விளையாட்டு மைதானம். திருச்சூர் ஹவுஸ், ரானே குழுமத்தின் நிறுவனர் எல்.எல். நாராயணன் இந்தச் சாலையில் உள்ள திருச்சூர் ஹவுஸில் வசித்தார். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இந்தச் சாலைக்கு அருகில் கோபாலபுரம் முதல் தெருவில் வசிக்கிறார். 1924 ஆம் ஆண்டு சென்னை அரசு ஊழியர் கூட்டுறவு கட்டிட சங்கத்தால் உருவாக்கப்பட்டது. இந்தச் சங்கத்தின் முதல் தலைவராக இருந்த என். கோபாலசாமி அய்யங்காரின் நினைவாகவே இந்தப் பகுதிக்கு கோபாலபுரம் என்று பெயரிடப்பட்டது.

‘கோபாலபுரம் பள்ளி செவன் கிரில் பார்ட்டி ஹால் போன்ற உணவகங்கள், ஐ பாக்கோ போன்ற கடைகள் இந்த பகுதியில் அமைந்திருக்கின்றன ‘

என்று கான்ரன் ஸ்மித் சாலையைப் பற்றிப் படித்து முடித்து விட்டு, கன்னிமாரா நூலகத்தை விட்டு வெளியே வந்த வாசு, கான்ரன் ஸ்மித் சிலை இருக்கும் , ரிப்பன் கட்டிடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *