செய்திகள்

காதல் திருமணம்: இளைஞர் வெட்டிக் கொலை

ஐதராபாத், மே 21–

ஐதராபாத்தில் காதல் திருமணம் செய்த 24 வயது இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

ஷாஹினாயத் கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேகம் பஜார் பகுதியில் உள்ள மீன் சந்தைக்கு அருகே நீரஜ் குமார் பன்வார் (வயது 22), நேற்று இரவு அவரது மனைவியின் உறவினர்கள் 5 பேரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

நீரஜ் கடையை மூடிவிட்டு தனது தந்தை ராஜேந்தர் பன்வாருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் கிரானைட் கல்லால் அவரது தலையில் தாக்கி, தேங்காய் வெட்டும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். தன் தந்தை கண் முன்னே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பேகம் பஜார் பகுதியில் நிலக்கடலை வியாபாரம் செய்து வந்த நீரஜ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சனா என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

திருமணத்திற்கு சஞ்சனாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் நீரஜ் மீது அவர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. பெண் வீட்டார் கடந்த 6 மாதங்களாக நீரஜை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக நீரஜை கண்காணித்து, நேற்று மழை காரணமாக அதிக மக்கள் இல்லாத நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், அவரை கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை இன்று போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.