சிறுகதை

காதல் தர்ணா | ராஜா செல்லமுத்து

ராஜராஜன் தெருவில் கூட்டம் கூடி நின்றது. எதற்காக இவ்வளவு கூட்டம் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.

அந்த தெருவில் உள்ளவர்கள் தவிர மற்ற எல்லோரும் ஏன் இந்த கூட்டம்? என்று விசாரித்துக் கொண்டே சென்றார்கள்.

ராஜராஜன் தெருவில் இருந்து வெளியே வந்த ஒரு நபரை பிடித்து கேட்டார் அந்த வழியாக சென்ற ஒருவர்.

ஏன் இங்கே இவ்வளவு கூட்டமா இருக்கு ? மீடியா வந்திருக்காங்க. ஒரே பரபரப்பா இருக்கு? ஏதோ சண்டை சத்தமா? என்று கேட்டார் அந்த வழிப்போக்கர்.

இல்லண்ணே இது வேற மாதிரி ஒரு விஷயம். அதான் இவ்வளவு கூட்டம் கூடி இருக்கு.

அப்படி என்ன விஷயம்? என்று அவர் எதிர் கேள்வி கேட்டார்.

ஒரு பொண்ணு தன்னோட காதல காதலன் ஏற்றுக்கொள்ளனும் அப்படிங்கிறதுகாக அவ வீட்டு முன்னாடி தர்ணா இருக்கா. அதுதான் இவ்வளவு கூட்டம் எத்தனையோ பேரு சொல்லி பார்த்தோம். அந்த பொண்ணு கேட்கல. என்னோட காதலன் வேணும் அப்படின்னு அவ அங்க உட்கார்ந்து இருக்கா என்று அந்த வழிப்போக்கனுக்கு பதில் சொன்னான் ராஜராஜன் தெருவாசி

அப்படியா ? என்னங்க இது. ரொம்ப அதிசயமாக இருக்கு என்று சொல்ல.

இதில என்ன அதிசயம். இந்த பொண்ணு தன்னோட காதல் தோக்கக் கூடாது. தன் காதலனையும் விடக்கூடாதுனு அதற்காகத்தான் இந்த மாதிரி முடிவு எடுத்திருக்கிறா என்று அந்த வழிப்போக்கனுக்கு சொல்லிக் கொண்டிருந்தார் ராஜராஜன் தெருவாசி.

அந்த பொண்ணு யாருன்னு தெரியுமா? என்று இன்னொருவர் கேட்டார்.

இல்லங்க அந்த பொண்ணு எங்களுக்கு தெரியாது. அந்த பையன் தான் எங்கள் தெருவில் இருக்கிறான். இந்த பொண்ணு வெளியூரு போல. அதான் வந்து இங்க தர்ணா பண்ணிட்டு இருக்கு. எவ்வளவு தைரியம் அந்த பொண்ணுக்கு இல்லைங்க? தன்னுடைய காதல் மேல எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தா இந்த பொண்ணு அவங்க குடும்பம் சொந்த பந்தங்கள் எல்லாம் விட்டுட்டு வந்து இங்கே இப்படி தர்ணா பண்ணுவா? அதுதான் காதல் என்று அக்கம்பக்கத்தில் சென்றவர்கள் பேசிக்கொண்டு சென்றார்கள்.

அப்போது மீரா தன் காதலுக்காக வந்திருந்தாள். அவளைச் சுற்றி அவள் நண்பர்களும் இருந்தார்கள் எந்த சூழ்நிலையிலும் தன் காதலனை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று விடாப்பிடியாக உண்ணாநோன்பு இருந்தார் அந்தப் பெண்.

காவல்துறை அதிகாரிகளும் வந்து பார்த்துவிட்டு இது உறவு சம்பந்தமான பிரச்சனை. இதில் தலையிட முடியாது என்று சொல்லி விட்டு சென்று விட்டார்கள்.

அப்போது மீடியாக்காரர்கள் மீராவை இன்டர்வியூ செய்தார்.

மேடம் ஏன் இப்படி காதலுக்காக தர்ணா பண்றீங்க.? ஒருத்தவங்க பிடிக்கலன்னா விட்டுட்டு போக வேண்டியதுதானே? நீங்க கல்யாணம் பண்ணனும் இல்ல காதலிக்கனும். இந்த ரெண்டுமே நீங்க காதல் பண்ணிட்டு இருக்குற காதலர் பண்ணலையே. அவரையே நீங்க கல்யாணம் பண்ணும் நினைக்கிறீங்க? ஏன் இவரை போய் லவ் பண்றீங்க? கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறீங்க . இது பிடிவாதம் இல்லையா? இது ஒரு விதமான ஒருதலைக் காதல் இல்லையா என்று மீடியாக்கள் கேட்க…

இல்லையே நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா தான் லவ் பண்ணினோம். ஆனா, என்னை ஏமாத்திட்டு கார்த்தி எப்படி என்னைக் கைவிடலாம். அதனாலதான் நான் இங்கதான் இருக்கேன் என்று மீரா சொன்னார்.

சரி இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு மனிதனை உங்க மனசுல கொண்டு வந்து அவங்க கூடவாழ முடியும்ன்னு நினைக்கிறீர்களா? என்று கேட்க…

அதற்கு சிரிப்பு மட்டுமே பதிலாக தந்தாள் மீரா.

அவளை சுற்றி மீடியாக்கள், மக்கள் என்று சூழ்ந்து கொண்டார்கள்.

இந்த காதல் தர்ணா , ….

அரசியல் கட்சி மதம், மொழி, சாதி தாண்டி……

காதலுக்கான தர்ணவாக அமைந்ததில் காதலர்கள் எல்லாம் மீராவுக்கு ஆதரவு தந்து கொண்டிருந்தார்கள்.

அவளின் எதிரொலி முதலமைச்சர் வரை எட்டியது

ஏன் உலகநாடுகள் வரைக்கும் அவளின் காதல் எட்டியது.

அதுவரை செவிமடுக்காத கார்த்தி தன்னை இவ்வளவு தீவிரமாக காதலிக்கிறார் என்று இறங்கி வந்து மீராவை திருமணம் செய்து கொள்வதாக ஒத்துக் கொண்டான் கார்த்திக்.

அப்போது கடகடவென சிரித்தாள் மீரா

என்னை நீ காதலித்தாய் ?ஆனா ஏமாற்றினாய்… உன்னை நான் தர்ணா இருந்துதான் என் காதலை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? உன் காதல் பொய்யானது . உன்னுடன் நான் வாழ முடியாது. என் காதலை உண்மை என்று நிரூபிக்கவே இந்தத் தர்ணாவை நான் ஆரம்பித்தேன்.

குட் பை.. நீ எனக்கு வேண்டாம்.. உன் காதலும் எனக்கு வேண்டாம்…… என்று சொல்லிவிட்டு தன் காதல் தர்ணாவை முடித்துக்கொண்டு வீர நடை போட்டாள் மீரா

அவளின் காதல் உண்மை என்று சொன்னது..

கார்த்தி பொய்யானவன் என்று மக்கள் சொன்னார்கள்.

மீரா தன் காதலில் ஜெயித்தாள் தன் காதல் தர்ணாவிலும் ஜெயித்தாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *