சிவபுரி என்ற சிறிய நாட்டை நன்மாறன் என்ற குறுநில மன்னர் ஆட்சி செய்து வந்தார். நாடு வளத்தோடும் செழுமையோடும் கல்வி அறிவோடும் சிறந்து விளங்கியது.
அந்த மன்னனுக்கு சுந்தரவல்லி என்ற மகள் இருந்தாள். அவள் நல்ல அழகி. அறிவுக் கூர்மையும் மிக்கவள்.
நன்மாறனுக்கு தன் மகளை எல்லாத் துறையிலும் பயிற்றுவித்து அவளைப் பெரிய சகலகலாவல்லியாக்க வேண்டும் என்பது அவரின் கனவு. அதன்படியே அவளும் திறம்பட நடந்து வந்தாள். குழந்தைப் பருவத்தைக் கடந்து மங்கைப் பருவம் வந்தாள். நன்மாறனும் தன் மகளைப் பார்த்து பெருமிதம் கொண்டார்.
ஒரு நாள் தன் தந்தையிடம் வந்தாள். ‘தந்தையே’ எனக்கு எல்லாத் துறையும் கற்றுள்ளேன். ஆனால் தமிழ்ப் புலமைதான் சரவர வரவில்லை. கவிதை எழுதும் ஆற்றல் கைகூடவில்லை. அதற்குத் தான் என்ன செய்வது என்று புரியவில்லை என்று கூறி வருந்தினாள் சுந்தரவல்லி.
நன்மாறனும் மகளிடம் கவலைப்படாதே நான் அதற்கேற்ற ஆசானை நியமிக்கிறேன் என்று ஆறுதல் கூநினார். மந்திரியிடமும் சொன்னார். மகளுக்கேற்ற ஆசிரியரை தேடிப்பிடிக்க வேண்டும் என்றார்.
மந்திரி விசாரித்ததில் ஒரு இளைஞனைக் கண்டுபிடித்தார். மன்னனிடமும் அதுபற்றி கூறினார். இந்த இளைஞன் நல்ல திறமைசாலி. தமிழ் புலமை மிக்கவன். ஆனால் ஒரு சிக்கல் உண்டு; அது என்னவென்றால் அவனும் இளைஞன்; சுநத்தரவல்லியும் மங்கைப் பருவம் கொண்ட கட்டழகி. இருவரும் பாடம் சொல்ல அனுமதித்தால் பஞ்சையும் தீயையும் பக்கத்தில் வைப்பது போல். அது தான் யோசிக்கிறேன் என்றார்.
அதற்கு ஏதாவது யோசனை செய்வது என்று முடிவு எடுத்தனர். மந்திரியும் ஒரு திட்டம் சொன்னார். அது நல்ல தீர்வு என்றார் மன்னன். அதையே செயல்படுத்தும்படி மன்னன் உத்தரவு பிறப்பித்தார்.
படிக்கும் இடம் முடிவு செய்யப்பட்டது. நாளும் தீர்மானிக்கப்பட்டது.
பக்கதில் உள்ள வசந்த மண்டபம் ஒதுக்கப்பட்டது. அந்த அறையில் ஒரு பெரிய கனமான திரைச்சீலையைக் கட்டி அறையை நடுவில் பிரிப்பது. இந்தப் பக்கம் யுகேந்திரன் என்ற அந்த இளைஞன்; மறு பக்கம் சுந்தரவல்லி என்ற மன்னன் மகள் என்று முடிவெடுக்கப்பட்டது.
இருவருக்கும் தனித்தனி வாசல் வழி. யுகேந்திரனிடம் மந்திரி சொன்னார். உன்னிடம் படிகக்கப் போகும் மாணவி கண் பார்வை குறைந்தவள். ஆக்ஞ குரூபியாக இருப்பாள். பார்த்தால் பயந்து விடுவாய். அதனாலேயே நடுவில் திரைச்சீலை என்று கூறினார். சுந்தரவல்லியிடம் சொன்னார்கள் :உன்னுடைய ஆசான் கையிழந்த முடம், சற்று வயதும் கூடியவன். மிகவும் நடை தளர்ந்தவன். நீ பார்த்தால் பயப்படும்படி இருக்கும். அதனாலேயே இந்த திரைச்சீலை என்று சொல்லி வைத்தார்கள்.
நல்ல நாளில் பாடமும் ஆரம்பித்தது. யுகேந்திரன் நாளடைவில் சுந்தரவல்லியின் அறிவு கூர்மையை எண்ணி வியந்தான். சுந்தரவல்லியும் யுகேந்திரனின் புலமையை எண்ணி ஆச்சர்யப் பட்டாள். இருவரின் குரலும் ஒருவரை ஒருவர் வசீகரித்தது. பாடத்திட்டங்களும் முடிவடைந்தன. ஐம்பெருங்காப்பியம், பத்துப்பாட்டு எட்டுத் தொகை, பதினென்கீழ் கணக்கு என்று அனைத்து இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தாள்.
இந்த சித்ரா பவுர்ணமி அன்று இங்கு திருவிழா நடக்கும். அந்த கடற்கரையில் உன் கவிதையை அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்று மகளுக்கு கட்டளையிட்டார். சுந்தரவல்லியும் சம்மதித்தாள். யுகேந்திரன் காளையை அடக்கும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று மன்னன் கட்டளையிட்டார். அதனை யுகேந்திரனும் சிரமேற்கொண்டான்.
முதல் நாள் எங்கும் இளைஞர்கள் ,கன்னிப் பெண்கள் கூட்டங்களால் நிறையப்பட்டது. எங்கும் போட்டிகள்: மறுநாள் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சுந்தரவல்லியும் தன் கவிதையை வாசித்தாள். பால்போல் நிலவொளியில் கடற்கரை மணல் தங்கமாக ஜொலித்தது பற்றியும் மக்களின் உற்சாகத்தையும் விவரித்துப் பாடினாள். அந்தக் குரலைக் கேட்ட யுகேந்திரன் நம் மாணவி கண் தெரியாதவளாயிற்றே அவள் எப்படி இந்த கவிதையை எழுதியிருக்க முடியும். இந்தக் குரல் மட்டும் நமக்கு பரீட்சயமானது என்று நினைத்துக் கொண்டான். சுந்தரவல்லியும் காளையை அடக்கும் வாலிபனைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாள்.
மறுநாள் கவிதைப் போட்டியில் சுந்தரவல்லி பரிசு பெற்றதாக அறிவித்தார்கள். யுகேந்திரனும் காளைய அடக்கும் போட்டியில் பரிசு பெற்றான். அந்த கவர்ச்சி மிகு கட்டிளங்காளை தன் மகளுக்கு ஏற்ற ஜோடி என்றும் உறுதி செய்தார் மன்னர்.