செய்திகள்

காட்டுமன்னார்கோயில் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்

காட்டுமன்னார்கோயில் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் :

கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேரில் ஆய்வு

கடலூர், செப். 16

காட்டுமன்னார்கோயில், குமராட்சி ஒன்றியங்களில் வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் பேரிடர் கால மீட்பு உபகரணங்கள் குறித்து கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டத்தில் எதிர் வரும் வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் காட்டுமன்னார்கோயில் மற்றும் குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், வடகிழக்கு பருவமழைக் காலங்களில் ஏற்படும் சேதங்களை உடடினயாக சரி செய்வதற்கும், மரங்கள் சாய்ந்தால் அதனை உடனடியாக அறுப்பதற்கும், நோய் பரவாத வண்ணம் கொசு மருந்து தௌிப்பதற்கும், இரவு நேரங்களில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்வதற்கு மின்சாதன கருவிகள் போன்ற பல்வேறு பேரிடர் காலங்களில் பயன்படுத்தக் கூடிய மீட்பு கருவிகளை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் நீர் நிலைகளில் வௌ்ளப்பெருக்கு காலங்களில் உடைப்பு ஏற்படாத வண்ணம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மணல் மூட்டைகள் மற்றும் அனைத்து கருவிகளையும் தயார் நிலையில் வைக்கும்படியும் மற்றும் பைபர் படகுகளும் தயார் நிலையில் வைக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர் பெராம்பட்டு, திட்டுக்காட்டூர் இடையே பழைய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.19.5 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிகள், பெராம்பட்டில் பழைய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடல் உப்புநீர் உட்புகாத வண்ணம் ரூ.42.7 கோடி மதிப்பீட்டில் கதவணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது சிதம்பரம் பொதுப்பணித்துறை கொள்ளிட வடிநில கோட்ட செயற்பொறியாளர் சாம்ராஜ், ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் சந்தானகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகரன், மோகன்ராஜ், வட்டாட்சியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *