செய்திகள்

காஞ்சீபுரம் பொன்னேரிக்கரையில் 1000 ஏழைகளுக்கு அரிசி மூட்டைகள்

Spread the love

காஞ்சீபுரம் பொன்னேரிக்கரையில் 1000 ஏழைகளுக்கு அரிசி மூட்டைகள்:

அமைப்பு செயலாளர் சோமசுந்தரம் வழங்கினார்

காஞ்சீபுரம், மே 23 –

கொரோனா ஊரடங்கால் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டோர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது ஆணைக்கிணங்க, வாலாஜாபாத் மேற்கு ஒன்றியம் காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னேரிக்கரையில் 1000 ஏழைகளுக்கும், கழகத்தினருக்கும் அரிசி மூட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான வி.சோமசுந்தரம் ஏற்பாட்டின் பேரில் நடந்த நிகழ்ச்சியில் 1000 ஏழைகளுக்கும், கழகத்தினருக்கும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தரமான அரிசி மூட்டைகளை அவர் வழங்கினார். அரிசி மூட்டைகளை பெற்றுக் கொண்ட கழகத்தினர், பொதுமக்கள், தமிழக அரசுக்கும் வி.சோமசுந்தரத்துக்கும் நன்றியை தெரிவித்தனர்.

பிறகு அவர் பேசுகையில், அம்மா வழியில் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொரோனாவை ஒழிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனுக்குடன் மின்னல் வேகத்தில் எடுத்து வருகின்றனர். மேலும் ஏழை மக்களுக்கு நிவாரண உதவிகளை அறிவித்து வழங்கி வருகிறார்கள். கொரோனாவை ஒழிக்க மருத்துவம், சுகாதாரம், காவல் துறைகளை சேர்ந்தவர்கள் அல்லும்பகலும் பாடுபட்டு வருகின்றனர். யாரும் பயப்பட தேவையில்லை. சமூக இடைவெளியை பின்பற்றுங்கள், கிருமி நாசினி பயன்படுத்துங்கள், வெளியில் எங்கு சென்றாலும் முககவசம் அணிந்து செல்லுங்கள். விரைவில் கொரோனா என்ற கொடிய வைரஸில் இருந்து மீள்வோம் என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்.பி. காஞ்சீ பன்னீர்செல்வம், ஒன்றிய கழக செயலாளர்கள் அத்திவாக்கம் செ.ரமேஷ், அக்ரி கே.நாகராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ். சோமசுந்தரம், பொருளாளர் வீ.வள்ளிநாயகம், அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் கோல்டு ரவி, ஜெயராஜ், திலக்குமார், மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *