செய்திகள்

காஞ்சீபுரம் பாராளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க. கூட்டணி வேட்பாளர் மரகதம்குமரவேல் வேட்புமனு தாக்கல்

காஞ்சீபுரம், மார்ச் 25–-

காஞ்சீபுரம் பாராளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க. கூட்டணி வேட்பாளர் கே.மரகதம்குமரவேல், மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பா.பொன்னையாவிடம் வேட்புமனுதாக்கல் செய்தார்.

முன்னதாக அவர் காஞ்சீபுரம் நகராட்சி முன்பு உள்ள அண்ணா, காமராஜர், காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து வணங்கினார்.

அவருடன் பொறுப்பாளர் பா.வளர்மதி, மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அமைப்பு செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலிதிருநாவுக்கரசு, மாநில எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி காஞ்சீ பன்னீர்செல்வம், இளைஞரணி நிர்வாகி எஸ்.எஸ்.ஆர் சத்தியா, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், பாசறை செயலாளர் வி.ஆர். மணிவண்ணன், பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் வி.பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய கழக செயலாளர் தையூர் எஸ்.குமரவேல் உள்பட திரளானோர் ஊர்வலமாக அங்கிருந்து புறப்பட்டு இரட்டை மண்டபம், காமராஜர் வீதி, மூங்கில் மண்டபம், மேட்டுத்தெரு, காவலான் கேட் வழியாக கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந்தனர்.

அங்கு காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக முதல் மாடியில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பா.பொன்னையாவிடம் காஞ்சீபுரம் பாராளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க. கூட்டணி வேட்பாளர் கே.மரகதம்குமரவேல் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *