செய்திகள்

காஞ்சீபுரம் கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை செயலர் அபூர்வ வர்மா ஆய்வு

காஞ்சீபுரம், ஜன.8-–

தமிழக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத்துறை செயலர் அபூர்வ வர்மா காஞ்சீபுரத்தில் புராதன கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள வண்ண மின் விளக்குகளை ஆய்வு செய்தார்.

காஞ்சீபுரத்தில் உள்ள ரங்கசாமிகுளம், மங்கள தீர்த்தம் குளம், கைலாச நாதர் கோவில், கச்சபேஸ்வரர் கோவில், ஏகாம்பர நாதர் கோவில், காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட 9 கோவில்களிலும் அவர் ஆய்வு செய்தார். கைலாசநாதர் கோவிலுக்கு சென்ற அவர் அங்குள்ள பல்லவர் காலத்து கலைநுட்பத்துடன் கூடிய சிற்பங்களை பார்த்து வியந்தார். தொடர்ந்து, பேருந்து நிலைய பயணியர் பொருள் பாதுகாப்பு அறை, வாகனங்கள் நிறுத்தும் இடம் போன்றவற்றையும் அவர் பார்வையிட்டார்.

அவருடன் சுற்றுலாத்துறை ஆணையர் பழனிகுமார், மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் க.பெ.அசோக்குமார், காஞ்சீபுரம் அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி, நகராட்சி ஆணையர் பொறுப்பு மகேந்திரன், கோவில் செயல் அலுவலர்கள் வை.முருகேசன், என்.தியாகராஜன், அ.குமரன், கவிதா, சொ.செந்தில்குமார், மா. வெள்ளைச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *