செய்திகள்

காஞ்சீபுரத்தில் வீடு வீடாக சென்று பரிசோதனை, சத்துமாத்திரை வழங்கல்: மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர் ஆய்வு

காஞ்சீபுரம், ஜூன் 24–-

முதலமைச்சரின் ஆணையின்படி சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் பரவலை கருத்தில் கொண்டு 19ம் தேதி அதிகாலை முதல் 30ம் தேதி இரவு வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் தடுப்பு பணிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செயல்பாடுகள் குறித்து காஞ்சீபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர்களான தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலர் முனைவர் இல.சுப்பிரமணியன், கலெக்டர் பா.பொன்னையா ஆகியோர் காஞ்சீபுரம் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழ்படப்பை ஊராட்சி மற்றும் காஞ்சீபுரம் பெருநகராட்சியில் மலையாள தெரு, விளக்கடி கோவில் தெரு ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு வெப்பநிலை பரிசோதனை, சத்துமாத்திரைகள், எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் போன்றவை வழங்குவதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

களப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அனைவரும் பொதுமக்கள் அனைவருக்கும் இப்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், எழிச்சூர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய கட்டிடத்தில் வைரஸ் தொற்று புதியதாக ஏற்படும் நோயாளிகளுக்கு அவர்கள் தங்குவதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டனர். இக்கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில், 640 படுக்கைகள் அனைத்து வசதியுடன் தயார்நிலையில் உள்ளன. இவற்றை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி முத்துராமலிங்கம், சப்-கலெக்டர் சரவணன், இணை இயக்குநர் (சுகாதாரம்) ஜீவா, துணை இயக்குநர் (சுகாதாரம்) பழனி, ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குநர் (பயிற்சி) ரூபேஷ்குமார், காஞ்சீபுரம் வருவாய் வட்டாட்சியர் பவானி, காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி, என்ஜினியர் மகேந்திரன், உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *