செய்திகள்

காஞ்சீபுரத்தில் மனித கடத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சீபுரம், ஆக. 1 –

ஜூலை 30ம் தேதி மனித கடத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி, குழந்தைகள் கடத்தல் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளில் இருந்து விடுபடுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதையொட்டி காஞ்சீபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் மனித கடத்தல் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மணிமேகலை தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) வைஷ்ணவி கலந்து கொண்டு குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் அவைகளில் இருந்து எளிதில் விடுபட எவ்வாறு செயல்பட்டு தவிர்க்க வேண்டும் என்பது குறித்து பேசினார். குழந்தைகளிடம் பெற்றோர்கள் நாள்தோறும் மனம் விட்டுப் பேசி அவர்களின் செயல்பாடு, குறைகளை கேட்டறிய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், குழந்தைகளுக்கான உதவி அழைப்பு எண்கள் குறித்த விளம்பர பதாகைகள் மற்றும் ஸ்டிக்கர்களை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்சண்முகம், தாலுக்கா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம், சைல்டுலைன் மற்றும் தனியார் தொண்டு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *