செய்திகள்

காஞ்சீபுரத்தில் அரசு பொருட்காட்சி: கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

Spread the love

காஞ்சீபுரம், ஜூன் 19–-

அத்திவரதர் பெருவிழாவையொட்டி, காஞ்சீபுரத்தில் அரசு பொருட்காட்சி -நடத்துவது குறித்து பொருட்காட்சியில் பங்கேற்கவுள்ள அரசு துறைகள் மற்றும் அரசு சார்பு நிறுவன அலுவலர்களுடன் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் பா.பொன்னையா தலைமை வகித்தார்.

உலக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் அத்திவரதர் வைபவம் ஜூலை 1ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதையொட்டி காஞ்சீபுரம் நகர் நகரீஷ்வரர் கோவில் திடலில் தமிழ்நாடு அரசு பொருட்காட்சி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இப்பொருட்காட்சியில் கலந்து கொள்ள உள்ள அரசுத் துறைச் சார்ந்த அலுவலர்கள் தங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அரசு சார்ந்த துறைகள் தங்கள் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசின் திட்டப் பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகளை பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கவும், தினமும் பொருட்காட்சி நேரங்களில் தங்கள் துறை அரங்குகளை பார்வையிடும் பொதுமக்களுக்கு அரங்கை பற்றி விவரித்து கூற விவரம் தெரிந்த அலுவலரை நியமிக்க வேண்டும் எனவும், அரங்கினைப் பார்வையிடும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க ஏதுவாக பார்வையாளர் பதிவேடு வைக்கவும், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், தேவையான அளவு தீ தடுப்பு வாளிகளையும் தீயணைப்பு கருவிகளை அரங்குகளில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

அரசுப் பொருட்காட்சி தொடக்க விழா நடைபெறும் நாளுக்கு முன்னதாக துறைகள் அரங்க அலங்காரப் பணிகளை முடித்து அரங்குகளை தயார் நிலையில் வைத்திடவும் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, காஞ்சீபுரம் சார்-ஆட்சியர் செ.சரவணன், மாவட்ட கலெக்ரின் நேர்முக உதவியாளர் (பொது) மா.நாராயணன், மகளிர் திட்ட அதிகாரி சீனிவாச ராவ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *