காஞ்சிபுரம், ஜன. 12–
காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உடலியல் துறை சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை தேசிய நெடுஞ்சாலை காரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கல்லூரி நிறுவனர் மறைந்த ஏ என் ராதாகிருஷ்ணன் ஆசியுடன் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள 250 விரிவுரை மண்டபத்தில் உடலியல் துறை சார்பாக தலைமை புரவலர் கோமதி ராதாகிருஷ்ணன், சார்பு அதிபர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
உடலியல் துறை தலைவர் பேராசிரியர் மருத்துவர் ஆர்.முத்துலட்சுமி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உங்கள் சமநிலையைக் கண்டறிந்து உங்கள் வலிமையைக் கண்டறியவும் என்ற கோட்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மெசரிங் அண்ட் இம்ப்ரூவிங் மேக்ஸ் என்ற தலைப்பில் மருத்துவர் சினேகா அலெக்ஸாண்டர் மற்றும் சாம்பியன் டயட் என்ற தலைப்பில் சைனி சுகேந்திரன் ஆகியோர் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் இடையே கலந்துரையாடினர்.
இந்நிகழ்ச்சியில் சார்பு அதிபர் ஆகாஷ் பிரபாகர், துணைவேந்தர் பேராசிரியர் மருத்துவர் ஸ்ரீதர்,சார்பு துணைவேந்தர் பேராசிரியர் மருத்துவர் கிருத்திகா, பதிவாளர் பேராசிரியர் மருத்துவர் சுரேகா வரலட்சுமி, மருத்துவக் கல்லூரி டீன் கே.வி.ராஜசேகர், துணை முதல்வர் பேராசிரியர் மருத்துவர் ஈஸ்வரி உள்ளிட்ட மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.