செய்திகள்

காஞ்சிபுரம் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் கைது

Makkal Kural Official

சென்னை, அக். 9–

மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டதால் 20 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அந்த இரு​மல் மருந்தை தயாரித்த தனியார் மருந்து ஆலையின் உரிமையாளரான ரங்கநாதன் கைது செய்யப்பட்டார்.

மத்​திய பிரதேசம் சிந்த்​வாரா மாவட்​டத்​தில் கடந்த ஆகஸ்ட் மாதத்​தில் கோல்ட்​ரிப் இரு​மல் மருந்து காரண​மாக முதல் குழந்தை உயி​ரிழந்​தது. ஆனால், அடுத்தடுத்த நாட்​களில் மேலும் சில குழந்​தைகள் சிறுநீரக செயலிழப்​பால் அடுத்​தடுத்து உயி​ரிழந்தன. மொத்தம் 20 குழந்தைகள் அங்கு உயி​ரிழந்தன.

சளி, இரு​மல், லேசான காய்ச்​சலால் பாதிக்​கப்​பட்ட குழந்​தைகளுக்கு மருத்​து​வர்​கள் இரு​மல் சிரப் உள்​ளிட்ட வழக்​க​மான மருந்​துகளை பரிந்​துரைத்துள்​ளனர். ஆனால், அந்த மருந்தை எடுத்​துக்​கொண்ட பின்பு சில நாட்​களுக்​குள் அந்த குழந்​தைகளுக்கு சிறுநீர் வெளி​யேறு​வது குறைந்​தது. இதையடுத்​து, அவர்​களுக்கு சிறுநீரக தொற்று இருப்​பது கண்​டறியப்​பட்​டது. டயாலிசிஸ் கிகிச்சை தொடங்​கிய சில நாட்​களுக்​குள் குழந்​தைகள் அடுத்​தடுத்து இறந்​தனர்.

உயி​ரிழந்த குழந்​தைகளில் சிலர் மகா​ராஷ்டி​ரா, ராஜஸ்​தான் மாநிலங்​களைச் சேர்ந்​தவர்​களும் அடங்​கு​வர். பின்​னர் நடத்​தப்​பட்ட உடற்​கூ​ராய்​வில், குழந்​தைகளின் சிறுநீரகங்​களில் டைஎ​திலீன் கிளை​கோல் இருப்​பது கண்​டறியப்​பட்​டது. இது, விஷத்​துடன் தொடர்​புடைய ஒரு வகை நச்சு ரசாயனமாகும். விசா​ரணை​யில் அந்த குழந்​தைகளுக்கு கோல்ட்​ரிப் மற்​றும் நெக்​ஸ்ட்​ரோ-டிஎஸ் சிரப்​பு​கள் வழங்​கப்​பட்​டது தெரிய​வந்​தது. இதன் தொடர்ச்சியாக, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அந்த இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது.

‘சீல்’

தமிழ்​நாட்​டின் காஞ்​சிபுரத்​தில் உள்ள ஸ்ரேசன் பார்​மா சூட்​டிகல்ஸ் தயாரித்த கோல்ட்​ரிப் என்ற இரு​மல் சிரப்பை அக்​டோபர் 2-ம் தேதி, தமிழ்​நாடு மருந்து கட்​டுப்​பாட்டு அதி​காரி​கள் பரிசோ​தித்​த​தில் அந்த மாதிரி​யில் கலப்​படம் இருப்​ப​தாக அறி​வித்​தனர். தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. கோல்ட்ரிப் மருந்து, தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாட்டில்கள் சில்லறை மற்றும் மொத்த விற்பனையகங்களில் இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. அந்த மருந்துகளை மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், அவற்றை பறிமுதல் செய்து, சென்னையில் உள்ள தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கோல்ட்ரிப் இருமல் மருந்தை தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரைக் கைது செய்ய காஞ்சிபுரத்திற்கு வந்த மத்தியபிரதேச மாநில போலீஸ் குழு, கோல்ட்ரிப் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை கைது செய்தனர். சென்னை போலீசார் உதவியுடன் கைது செய்யப்பட்ட ரங்கநாதனை சுங்குவார்சத்திரம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 அதிகாரிகள் சஸ்பெண்ட்:

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த மருந்தின் தரத்தை 2 ஆண்டுகளாக ஆய்வு செய்யாத 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தில் நச்சுத்தன்மை அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 1-ந்தேதி மத்திய பிரதேசத்தில் இந்த மருந்தை சாப்பிட்ட 20 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் அம்மாநில அரசு தமிழ்நாட்டிற்கு தகவல் தெரிவித்தார்கள்.தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்து இந்த இருமல் மருந்தில் நச்சுத்தன்மை இருப்பதை கண்டுபிடித்தது. இது பற்றி உடனே மத்திய பிரதேச அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஒடிசா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கும் தகவல் தெரிவித்தோம்.ஆனால் மத்திய பிரதேச அரசும், மத்திய அரசும் இந்த மருந்தில் தவறு இல்லை என்று கூறி அலட்சியமாக இருந்து விட்டனர். நாம்தான் இந்த இருமல் மருந்தில் நச்சுத்தன்மை எந்த அளவு கலந்து உள்ளது என்பதை உறுதிபடுத்தி விட்டு உடனே 3-ந்தேதியில் இருந்து அந்த மருந்தை இனி கடைகளில் விற்க கூடாது என்று உத்தரவிட்டோம்.

அதுமட்டுமின்றி அந்த தொழிற்சாலையில் இருமல் மருந்தை தயாரிக்க தடை விதித்தோம். இது குறித்து விளக்கம் தருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த நோட்டீசை வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலையில் நோட்டீசை தொழிற்சாலையில் ஒட்டி விட்டு வந்து உள்ளனர்.இந்த நிலையில் அந்த உரிமையாளர் நேற்றிரவு கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

அதுமட்டுமின்றி கம்பெனிக்கு அவரை அழைத்து சென்று தாசில்தார் விசாரணை நடத்தவும் உள்ளனர். அவரது பதிலுக்கு பிறகு நிரந்தரமாக கம்பெனியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.அடுத்த கட்டமாக அந்த கம்பெனியின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வதற்கும் கம்பெனியை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நிலையில் 2 சீனியர் மருந்து தர ஆய்வாளர்கள் கடந்த 2 ஆண்டுகளாக மருந்து தரத்தை ஏன் ஆய்வு செய்யவில்லை என்கிற வகையில் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு கூறி உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *