காஞ்சிபுரம், நவ.22:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தனியார் துறை சார்பாக உரிமை பெற்ற நில அலுவலர் நியமிக்கப்படுவதை எதிர்த்தும், 502 குறுவட்ட அலுவலர் பதவி தரம் குறைக்கப்பட்டுள்ளது. அந்த பதவிக்கான தரம் உயர்த்தி தர வேண்டும் என்றும், சுமார் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள 1000க்கும் மேற்பட்ட நில அலுவலர் பதவி காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி நில அளவை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் ஆய்வாளர் ராஜா மற்றும் நில அளவை ஊழியர்கள் ஜோதி, மகாலட்சுமி, சுந்தரவடிவேல், கார்த்திகேயன் உட்பட்ட 50க்கும் மேற்பட்ட நில அளவை அலுவலர்கள் கலந்து கொண்டு போராட்டத்தில்ஈடுபட்டனர்.
![]()





