செய்திகள்

காசுக்கு ஓட்டு வாங்கிய ஜப்பான் சட்ட அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை

டோக்யோ, ஜூன்.19–

மேல்சபைக்கு தனது மனைவியை (பெயர்:அன்ரி) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க 100 பேருக்கு சுமார் 2 கோடியே 90 ஆயிரம் ‘யென்’னை பட்டுவாடா செய்ததாக, நீதித்துறை முன்னாள் அமைச்சர் கட்சுயுகி கவாய்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தேசிய டிவி என்எச் கே இத்தகவலை வெளியிட்டது.

கவாய் – குற்றவாளி எனத் தெரியவந்த நிலையில் சிறை தண்டனையோடு அவருக்கு 13 லட்சம் யென் அபராதம் விதிக்கப்பட்டது.

டோக்யோ மாவட்ட நீதிமன்றம் இத்தகவலை உடனடியாக ஊர்ஜிதம் செய்யவில்லை.

கவாய்–முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேயின் நெருக்கமான சகா. தனக்கெதிரான குற்றச்சாட்டை அவர் ஒப்புக் கொண்டார்.

2019,ஜூலை 19ந் தேதி நடந்த மேலவை தேர்தலில் அன்ரி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கனவே ஒரு விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர். இந்த ஆண்டு துவக்கத்தில் 16 மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

2019ல் முன்னாள் பிரதமர் அபே, கவாயை நீதித்துறை அமைச்சராக்கினார். இவர் மீது குற்றச்சாட்டு விஸ்வரூபமெடுத்ததும் அவர் பதவியை விட்டு விலகினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *