நாடும் நடப்பும்

காசா பகுதியில் போர் பதட்டம், தட்டி கேட்க தயங்கும் ஐநா!

சமீபமாக யுத்தக் காட்சிகள் காசா பகுதியிலும் இஸ்ரேலிய எல்லைப் பகுதிகளிலும் அதிகரித்து வருவது ஊடகங்களில் பார்ப்பவர்கள் இது எதற்கு? என யோசிப்பவர்கள் பலர் என்பது தான் நிஜம்.

குறிப்பாக வாட்ஸ்அப்பில் காசா பகுதியில் இருக்கும் ஹமாஸ் இயக்கம் மறைத்து வைத்திருக்கும் ரகசிய ஆயுதக் கிடங்குகளை தகர்க்க ராக்கெட் தாக்குதல்கள் நடைபெற்றதாகவும் அதில் ஒரு பெரிய அடுக்குமாடி கட்டிடம் சில வினாடிகளில் தரைமட்டமாகியதையும் கண்டோம்?

இவையெல்லாம் சமீபத்திய யுத்த காட்சிகளா? அல்லது வேறு நடப்புகள் இப்படி பொய் பரப்புரையாக பரவிக் கொண்டு இருக்கிறதா? யுத்த நேரத்தில் இப்படிப்பட்ட பொய் பிரச்சாரங்கள் தலை ஓங்கியே இருக்கும்!

உண்மையில் தாக்குதல் நடப்பது நிஜம்தான். அதில் இந்திய வம்சாவளி பெண் செவிலியர் பாலஸ்தீன பகுதியில் உள்ள காசா சுதந்திரப் பிரதேசத்தில் கடந்த வாரம் குண்டு வீச்சில் மடிந்துள்ளார். மேலும் 50க்கும் மேற்பட்டோர் தொடர் குண்டு தாக்குதலில் செத்திருக்கலாம்.

காசா மீது இஸ்ரேல் இப்படி சுமார் 20 ஆண்டுகளாக தாக்குதல் நடத்திக் கொண்டு இருக்க காரணம் என்ன?

இஸ்லாமிய பிரிவில் ஒரு தரப்பு பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து விடுதலை வாங்கிக் கொண்டது அல்லவா? அதை இந்தியாவும் வரவேற்றது.

அந்த பாலஸ்தீனத்தில் ஓர் இஸ்லாமிய மத பிரிவு தனிக் கட்சியாக ஹாமஸ் என உதயமானது. 1987ல் இவர்கள் துப்பாக்கி ஏந்தி இஸ்ரேல் ராணுவத்துடன் மோதி பல பாலஸ்தீன குடும்பங்களை காப்பாற்றியதால் என்றும் அங்கு இருப்போரின் நம்பிக்கையை பெற்றுள்ளது.

காசாவின் ஜனநாயகம் தழைக்க ஹமாஸ் பாலஸ்தீனிய தேர்தலிலும் குதித்தது. காசா பகுதியில் முழு வெற்றியை பெற்று தனிப்பட்ட ஆட்சியையும் தொடர்கிறது.

மேற்கு கரை, காசா ஆகிய இரு பகுதிகளும் தான் பாலஸ்தீனம் ஆகும். மத்திய தரைக்கடல் அதாவது Mediterranean Sea பகுதியின் 11 கிலோ மீட்டர் கடற்கரை இந்த பாலஸ்தீனமாகும். தென்மேற்கே எகிப்தும் கிழக்கேயும் வடக்கேயும் இஸ்ரேல் பகுதிகள் சூழ இந்த சிறு பூமி 11 கிலோ மீட்டர் நீண்ட தனி நாடாக இருக்கிறது.

பாலஸ்தீனியர்களின் ஜனத்தொகை 15 லட்சமாகும், காசா பகுதியில் உள்ள ஜனத்தொகை உலகின் 3 வது மிக அடர்த்தியான ஜனத்தொகை கொண்ட பிரதேசமாகும். இப்பகுதியில் 10 லட்சம் பேர் அகதிகள் என்று ஐநா அங்கீகரித்துள்ளது. இப்படிப்பட்ட தள்ளுமுள்ளுக்கிடையே மக்களால் வாழ முடியாத சூழ்நிலையில் அன்றாட வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் முதலிய அமெரிக்க கூட்டணி நாடுகள் பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் தந்து விட்டாலும் ஹமாஸ் அமைப்புக்கு அரசியல் அங்கீகாரம் தரவில்லை. மாறாக தீவிரவாதிகள் என்றே முத்திரை குத்தியுள்ளது.

ஆனால் ரஷ்யா, சீனா உட்பட சில நாடுகள் ஹமாசை போராளிகள் என்று கூறி அவர்களுக்கு ஐநா சபையின் அங்கீகாரத்தை கோரி வருகிறது.

தீவிரவாதிகள் என்றால் உலக நாடுகளின் நிதி உதவிகள் சென்றடையாது. அதைத்தான் அமெரிக்காவும் கன்னடவும் செய்து கொண்டிருக்கிறது.

காசா பகுதியில் சர்வதேச நிதி உதவிகள் வந்தால் அது ஆயுத முதலீடாக மாறி ஹமாசின் கை ஓங்கி விடுமென்று எகிப்தும் இஸ்ரேலும் கூறுகிறது.

ஆனால் பாலஸ்தீனத்தின் மீது நடத்திய தாக்குதல்களால் தான் நாங்கள் என்று எந்த கல்வி, மருத்துவ வசதிகள் பெறமுடியாது தவிக்கிறது என்று ஹமாஸ் கூறுகிறது.

எங்கள் பகுதியில் நுழைய துடிதுடித்துக் கொண்டிருக்கும் இஸ்ரேல் ராணுவத்தை தடுப்பதற்காகத்தான் நாங்கள் போரில் ஈடுபட்டுள்ளோம் என்று 2008 முதல் கூறி வருகிறது.

இரு தரப்பிலிருந்தும் எழுந்துவரும் ராக்கெட் குண்டு வீச்சில் இரு தரப்பிலும் சேதம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் நவீன ராணுவ தளவாடங்கள் முழுமையாக செயல்பட்டு வருவதால் சர்வதேச ஆயுத தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொண்டாட்டம் தான்!

தங்களுக்கு வந்தால்தானே தலைவலியின் வேதனை புரியும்! ஆகவே ஐநா சபையின் நிரந்தர உறுப்பினர்கள் ராணுவதளவாட சுயநலத்திற்காக எந்த ஒரு நல்ல தீர்வு ஏற்படாமல் சிக்கலை தீர்க்காமல் எரியும் தீயில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

பாலஸ்தீன மக்கள் நலன் மீது அக்கறையின்றி இஸ்ரேலிய ராணுவமும் ஹமாஸ் அமைப்பு ஆயுதப் போரில் ஈடுபட்டு இருப்பது சரிதானா? அப்பாவி உயிர்களுக்கு மதிப்பில்லையா?

இப்படிப்பட்ட துயர கேள்விகள் உலகின் மிகப் பண்டைய நாகரீகமான பாலஸ்தீனத்தில் எழுந்திருப்பது வியப்பானதே! இது பற்றிய ஐநா சபை பிற நாடுகள் கொண்ட நடுநிலை அமைப்பை ஏற்படுத்தி யுத்த நிறுத்தத்தையும் ஒரு நல்ல தீர்வுக்கும் வழி காண வேண்டும்.

இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே ஏற்பட்டு இருக்கும் சண்டை 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் பழைய சிக்கல்கள் ஆகும்.

இந்தச் சிக்கல்கள் இந்த நூற்றாண்டிலும் தொடர்வதால் இரு தரப்பிற்கும் என்றேனும் மிகப்பெரிய சர்வ நாச ராக்கெட் தாக்குதலுக்கு வழியாகவே இருப்பதால் உலகமே அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.

கடந்த வாரத்தில் இஸ்ரேல் தலைநகர் ‘டெல் அவிவ்’ நகரை நோக்கி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவியுள்ளனர். அதை மிகத் துல்லியமாக தற்காக்கும் ஆற்றல் மிகப் பாதுகாப்பு ராணுவ தளவாடங்கள் இஸ்ரேலில் இருப்பதால் இதுவரை உயிர் சேதமோ, கட்டுமான சிதைப்போ நடக்கவில்லை.

தற்போது இஸ்ரேல் காசா பகுதியில் சில கட்டுமானங்கள் சிதைந்து விட்டதாக வலம் வரும் வீடியோ காட்சிகள் எழுப்பும் மிக முக்கியமான சந்தேகம் என்றேனும் முழு யுத்தமாக மாறினால் எண்ணெய் வளைகுடா பகுதியில் மீண்டும் பதட்டம் வருமே.. கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி தவிக்கும் உலகம், இப்படிப்பட்ட போர் சிக்கலால் துவண்டுவிடுமே என்ற அச்சம் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *