செய்திகள்

காசா நகரின் சுரங்கங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல்

டெல் அவிவ், நவ. 8–

காசா நகரின் மைய பகுதிக்கு சென்ற இஸ்ரேல் ராணுவம் சுரங்கங்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ்களுக்கு இடையேயான போர் 33 வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் படைகள் காசா நகரின் மையப்பகுதிக்குள் நுழைத்திருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் ஹமாஸ்களை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ்களின் பரந்த சுரங்கப்பாதைகளைக் கண்டுபிடித்து தாக்கத் தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.

இஸ்ரேலின் தரைப்படைகள் ஹமாஸ்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் நீண்ட சுரங்கப்பாதை வலையமைப்பை தற்போது தாக்கத் தொங்கியுள்ளது. சுமார் 100 கிலோ மீட்டர் வரை நீண்டு செல்லும் சுரங்கப்பாதைகளை தகர்ப்பதற்காக இஸ்ரேஸ் ராணுவ பொறியாளர்கள் வெடிமருந்துக்களை பயன்படுத்தி வருவதாகவும் உயர் ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தொலைக்காட்சியில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஒரு மாதத்தைக் கடந்துள்ள ஹமாஸ்களுக்கு எதிரான போர், அவர்கள் இதுவரை பார்த்திராதது. இஸ்ரேல் ராணுவம் மாபெரும் சக்தியுடன் முன்னேறி வருகின்றது. இஸ்ரேலின் தரைப்படைகள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும் ஹமாஸ்களுக்கு எதிரான பிடியைத் தீவிரப்படுத்தி வருகின்றன. மேலும் ஹமாஸ்கள் பிணைக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யும் வரை காசாவுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என்று பிரதமர் தெரிவித்தார்.

இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர், யோவ் காலண்ட், ஹமாஸ்களை அழிப்பதில் இஸ்ரேல் ராணுவம் உறுதியாக உள்ளது; இஸ்ரேல் படைகள் காசாவின் மையப்பகுதிக்குள் நுழைந்து விட்டன என்று தெரிவித்தார். இந்த நிலையில், உயிர்காக்கும் மருந்துப்பொருள்களைச் எடுத்துச்சென்ற செஞ்சிலுவைச் சங்கத்தின் வாகனங்கள் நேற்று காசா பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகின. 5 லாரிகள், 2 பிற வாகனங்கள் மருந்துக்களை ஏற்றிச் சென்றுள்ளன. இதில் 2 வாகனங்கள் சேதமானதாகவும், ஓட்டுநர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மருந்துகள் ஏற்றிச் சென்ற வாகனங்கள் தங்களின் பாதையை மாற்றிக்கொண்டு, அல் ஷிஃபா மருத்துவமனையில் மருந்துப்பொருள்கள் கொடுக்கப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் உள்ள காசா பகுதியில் அக்டோபடர் 7–ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 1,400 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஹமாஸ்களை முற்றிலுமாக அழிக்கும் நோக்கில் இஸ்ரேல் ராணுவம் வான் வழியாக பதில் தாக்குதல் நடத்தியது. காசா நகரின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இந்த பதில் தாக்குதலில் இதுவரை 10,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலில் 1,400 பேர் பலியாகியுள்ளனர். 242 பேர் ஹமாஸ் படையினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். ஆனால் இன்னும் போருக்கு சுமூக தீர்வு எட்டப்படவில்லை. உலக தலைவர்கள் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதனை மறுத்து வருகிறார்.

அமெரிக்கா, ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு முழு ஆதரவு அளித்துள்ளது. அதே சமயம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “ஹமாஸை அழிப்பது அவசியம். ஆனால் அதற்காக ஹமாஸ் பிடியில் உள்ள காசாவை முழுவீச்சில் இஸ்ரேல் ஆக்கிரமிக்க நினைப்பது தவறு. மனிதாபிமான போர் நிறுத்தம் தேவை” என்று கூறி வருகிறார். இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *